பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுதல் அவரால் இயலாது. அருள் உ ைட ய வ ர் க் குத் துன்பம் என்பது எக்காலத்தும் உண்டாகாது. இவ்வாறெல்லாம் உயர்வுடைய அருளை உடையவர். இம்மையில் பெருமைப்பட வாழ்தலோடு, மறுமையிலும் நல்வாழ்வு பெறுவர். ஆனால், அருள் இல்லாதவர்க்கு இம்மையிலும் நல்வாழ்வு இல்லை; மறுமையிலும் நல்வாழ்வு கிட்டாது. இது உண்மை; ஆனால் பிறர்க்கு எளிதில் விளங்காத ஒன்று. இதை விளக்க வந்த வள்ளுவர்க்குப் பொருளைக்காக்கத் தெரியாத ஒருவன் கைகொடுத்து உதவ முன் வந்துள்ளான்; அதனால் கூறிவிட்டார். - "அருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, - . பொருள் இல்லார்க்கு இவ் உலகம் இல்லாகி யாங்கு” (குறள்:247) இம்முறை இயலாது ஆயினும், ஒரு முறையாவது நாள் தோறும் நீராடி, உடலை நன்கு காத்துக் கொள்வது நீங்காக் கடமை ஆகும்; அக்கடம்ையினைக் குறைவற நிறைவேற்ற வேண்டின்; அதற்கு நீர் இன்றியமையாதது. நீர்வளம் அற்ற சகாரா போன்ற பா ைல வ ன நாடுகளில் அது இயலாது; ஆகவே, புற உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள நீர் இன்றி அமையாதது, இது உலகத்தவர் அனைவரும் கண்ட, காணும் உண்மை. எவர்க்கும் தீமை பயக்காத சொற்களைச் சொல்லுவது, உள்ளத் தூய்மை உடையாரால் மட்டுமே இயலக்கூடியது, ஒருவரின் மனம் தூய்மையானது என்பதை, அவரின் வாயிலிருந்து வெளி வரும் சொற்களிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம், இந்த உண்மையை உலகத்தவர் எளிதில் உணர்ந்து கொள்வது இயலாது. இயலாத அவர்க்கும் அதை 29