பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"புகஇன்றால்; புத்தேள்நாட்டு உய்யாதால்: . என்?மற்று இகழ்வார் பின்சென்று நிலை” (966) நிலத்தோடு நீர் கலந்தாற்போல, மனம் ஒன்றியிருக்கும் கணவனிடம் ஊடுதலைவிட மனைவிக்கு இன்பம் தருவது, தேவர் உலகத்திலும் இருக்குமோ இருக்காது உறுதியாக "புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தோடு நீர்இயைந் தன்னார் அகத்து’’ (1323) பிறரிடம் ஒரு பொருளை யாசித்துப் பெருதல் ஒரு நல்ல செயலுக்காக எனினும் பெறுதல் தீது தீதுதான். பிறர்க்கு உதவுவதால், வான் உலக வாழ்க்கை வ ழு க் கி வி டு ம் என்றாலும் உதவுவதே சாலவும் சிறந்தது, 'நல்லாறு எனினும், கொளல்திது; மேல் உலகம் இல்எனினும் ஈதலே நன்று” (222) இவ்வாறெல்லாம் நம்பிருயிந்தனர் பழந்தமிழ்மக்கள் வானோர் உலகம் பற்றி. - தரகம் 'அளறு, (225), ஆரிருள் (121), இருள் சேர்ந்த இன்னா உலகம், (243), தீ, (168), என்ற பெயர்களில் நரகை உணர்ந்திருந்தனர் பழந்தமிழர். - உயிரும், உடலும் ஒன்றி வாழ்கின்ற நிலைமை அவ் வுடலை அழித்து, அவ்வூனைத் திண்மையாகிய தன்மையில் நிற்கிறது; இந்த உண்மையை மறந்து, ஒருவன், உயிரையும், உடலையும் வேறுபடுத்தி, அவ்வுடலின் ஊனைத்தின்று வருவானாயின்: அவ்வாறு தின்றவன் உடலையே முழுமை யாகத் தின்றுவிடும் நரகம், அவன் தப்பியும் புறம்போந்து 38