பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமகளைத் தேடி நீ அலையாதே; உள் ள து போது ம் என்ற மனநிறைவு கொள்; பிறர் பொருளைக் கவரக் கனவிலும் கருதாதே; அது போதும்; திருமகள், உன்னைத் தேடி அலைந்து உன்பால் வந்து சேர்வள் என உரைத்து, பிறர் பொருள் வெஃகாமைக்கே வி ழு மி ய தோ ர் இடம் அளித்துள்ளார்; திருமகளுக்கு அன்று. வள்ளுவர் பார்வையில் இந்திரன்: இந்திரனை அறிந்திருந்தனர்; அமரர் தலைவனாக, வழிபடத்தக்கவனாக அல்ல. ப ந் த க ன் ற பேருலகாம் தேவலோகத்தின் தலைவன்தான். எனினும், கெளதமன் மனைவி அகலிகைபால் ஆசைகொண்டு அக்கெளதமனால் சபிக்கப்பெற்று உடலெல்லாம் ஆயிரம் கண்பெற்ற இந்திரன் (குறள்:25) எ ன க் கூ றி ய த ன் மூலம், பிறர்மனை நயப்பவனுக்கு எத்தகைய அவக்கேடு நேரும் என்பதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகக் காட்டவல்ல இழிதகை யோனாக! வள்ளுவர் கண்ட வான்உலகம்: வரன் (24), வான் (50.85,346), வானம் (353) புத்தேளிர் வாழும் உலாகு (58), புத்தேள் உலகு (213,234, 290,1323). மேல் உலகம் (322) என்றெல்லாம் வழங்கப் பெறும் வானவர் வாழும் உலகை அறிந்திருந்தனர் என்பது உண்மை. - r அறிந்திருந்தனர் என்பது உண்மை; ஆனால், அறிந்த அதை, அவர் க ள் எந்த அளவு மதித்தனர்? சென்று: அடையலாகா இடம் என்றா? சென்று அடைய வேண்டிய இடம் என்றா? அடைந்தே தீர வேண்டிய இடம் என்றா? சென்று அடைந்தால்தான். இம் மண்ணுலகில் பிறந்ததன் 45