பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்ததுபோல, நிலைகுலைதற்குக் காரணமாய் அவர் செய்த செயலின் சிறுமையை உணர்த்த குன்றி கை கொடுத்துள்ளது. "குன்றின் அனையாரும் குன்றுவர், குன்றுவ குன்றி அனைய செயின்’ (965) தினயுைம் பனையும்: உருவத்தால் சிறியது தினை; உருவத்தால் பெரியது பனை, தினை, பனைகளின் சிறுமை, பெருமைகளை உணர்த்த, திருவள்ளுவர் அவற்றை இருகுறட்பாக்க்ளில் கையாண்டுள்ளார். 'தினைத்துனை நன்றிசெயினும், பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்’ (104) 'தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறையவரின்' (1282) நெருஞ்சி: நிலத்தில் படரும் நெருஞ்சி, மலரும் பருவத்தில் சின்னஞ் சிறு பச்சிலைகளுக்கிடையே, மஞ்சள் நிற மலர்களை மலர்ந்து காட்டும் காட்சி கண்ணுக்கு விருந்தாகும். மலர்ந்து கிடக்கும் போது அது கண்களுக்கு நன்கு புலப்படும். ஆனால், ஈன்ற சின்னஞ்சிறு காய்கள் முற்றிக்கிடக்கும்போது, இலைகளும் உதிர்ந்துபோக, ெச டி யே கண்ணுக்குப் புலப்படாது. புலப்படாநிலையில், அச்செடிமீது அறியாது அடிவைத்து விட்டால், அம்மம்ம! முற்றிய காயின் முட்கள், உள்ளங் காலில் குத்தி கொடுந்துன்பம் தந்துவிடும். 'நெருஞ்சியின் இயல்பு.இது. "சிறியிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர்,முட் பயந்தாங்கு' என்பது குறுந்தொகை (202)