பக்கம்:வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை உணர்த்த ஆண்டிருக்கும் அருமை பாராட்டற்கு உரியது. பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு' (குறள் 1274) பறப்பன: அன்னம்: திருவள்ளுவர், அன்னத்தின் இறகு மென்மையானது தான், ஆனால், அதுவும் மகளிர் காலடியின் மென்மைக்கு ஈடாகாது என கூறியதை முன்னரே கண்டோம் (குறள் 1120) காக்கையும் கூகையும்: - காக்கையின் துணையை இரண்டு இடங்களில் நாடி யுள்ளார் வள்ளுவர். அவனோ சிற்றரசன்; அவனிடம் இருப்பதோ சிறுபடை, அவன் பகைவனோ பேரரசன்; அவனிடம் இருப்பதோ பெரும்படை, நிலைமை இதுவாகவும், அப்பேரரசனை வெல்லக் கருதினான் அச்சிற்றரசன். அதற்கு வழியாது என அறியத் தன்னிடம்வந்த அச்சிற்றரசனுக்கு, 'உனக்கு வாய்ப்புடைய காலமாக, அவனுக்கு வாய்ப்பு இல்லாக் காலமாகப் பார்த்துப் போர்தொடுத்துவிடு; வெற்றி உறுதி' என அறிவுரை கூறியவழி ஒருமுறை காக்கையின் துணையை நாடினார். 'அரசே! கூகை, அதாவது கோட்டான், காக்கையை விட வல்லமை வாய்ந்ததுதான்; ஆனால், அதற்கு இரவில்தான் கண்தெரியுமே அல்லாது பகலில் கண் தெரியாது. அதனால் காக்கை, பகலில் அதன் இடம் தேடிச்சென்று குத்திக் கொன்றுவிடும்” எனக்கூறி அவனுக்கு ஊக்கம்.ஊட்டி அளித்த இடம் ஒன்று. -5- 65