பக்கம்:வழிகாட்டி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வழிகாட்டி

உளர்ப்பு - கலைத்தல். கால் - காம்பு. குண்டு - ஆழம். குல்லை - கஞ்சாச்செடி. மராம் - வெண்கடம்பு. இணர் - பூங்கொத்து. சுரும்பு - வண்டு. கால் - வடம். உடீஇ - உடுத்து.)

முருகன் திருக்கோலம் முருகனும் தன்னை அலங்கரித்துக் கொண்டு வருகி றான். இயற்கையாகவே செக்கச் செவேலென்ற திரு மேனியை உடைய அழகன் அவன். சிவந்த ஆடையை உடுத்திருக்கிறான். சிவந்த அடிமரத்தையுடைய அசோகந் தளிரைக் காதிலே செருகியிருக்கிறான். அவன் வரும்போது அந்தத் தளிர் மெல்ல அசைகின்றது. இடை யிலே கச்சணிந்தும் காலிலே வீரகண்டையைப் புனைந் தும் திருமுடியிலே வெட்சி மாலையைச் சூடியும் வரு கிறான். சில சமயங்களில் கண்ணனைப் போலப் புல் லாங்குழலை ஊதுகிறான். சில சமயம் ஊது கொம்பை ஊதுகிறான். இன்னும் சில சமயங்களில் வேறு பல வாத்தியங்களை வாசிக்கிறான். இசை விரும்பும் இள வழகன் அவன். தன் வாகனமாகிய ஆட்டில் சில சமயம் ஏறி வருகிறான். சில சமயம் மயில் மீது வருகிறான். குற்ற மற்ற கோழிக் கொடியை ஏந்தியிருக்கிறான். ஆஜானுபாகுவாக நெடியவனாகக் காட்சி அளிக்கிறான். தோளிலே வாகுவலயம் அணிந்து கொண்டிருக்கிறான்.

செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலின்ை செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன் தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன் நெடியன் தொடிஅணி தோளன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/128&oldid=643771" இலிருந்து மீள்விக்கப்பட்டது