பக்கம்:வழிகாட்டி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 193

பலவுடன் கழிந்த உண்டியர், இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும் கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர், காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர், இடும்பை 135

யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துனிஇல் காட்சி முனிவர் முற்புகப் புகைமுகந்து அன்ன மாசில் தூஉடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் 140 நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்நரம்பு உளர, நோய்இன்று இயன்ற யாக்கையர், மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும் பொன்உரை கடுக்கும் திதலையர், இன்நகைப் i45 பருமம் தாங்கிய பணிந்தேந்து அல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக், கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் 150 புள்அணி நீள்கொடிச் செல்வனும், வெள்ஏறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும், நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் i55 வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய 160

வ.க.-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/195&oldid=643946" இலிருந்து மீள்விக்கப்பட்டது