பக்கம்:வழிகாட்டி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை 395

விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று:

5. குன்றுதோறாடல் பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் j90 அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன், நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் நீடமை விளைந்த தேக்கள் தேறல் 195 குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரல்உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் 200 முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வாலினர் இடைஇடுபு சுரம்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்பு உடீஇ மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு 205 செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன் தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலம் 210 கொடியன் நெடியன் தொடிஅணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி - 215

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/197&oldid=643955" இலிருந்து மீள்விக்கப்பட்டது