பக்கம்:வழிகாட்டி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-


திருமுருகாற்றுப்படை சங்க நூல்களில் முதன்மை பெற்றது. அதன் ஆசிரியர் நக்கீரர். அவர் சங்கப் புலவ ருள் முதன்மை பெற்றவர். நாயகன் கவிக்குங் குற்றங் கூறிய பெருமை அவருக்கு உண்டு. 'வில்லுக்குச் சேரன்; சொல்லுக்குக் கீரன்’ என்பது பழமொழி.


தெய்வப் புலவோர் அருளிச் செய்த முதல் நூல்கள் தெய்வம் போன்றன. அவை அவரவர் முயற்சிக்கேற்ற அளவிலும், காலநிலைக்கு ஏற்றவாறும் பொருண்மை வழங்கும் இயல்பு வாய்ந்தன. காலக் கண்ணாடி அணிந்து அவற்றை நோக்க வேண்டுவது அறிஞர் கடமை.


முன்னாளில் திருமுருகாற்றுப்படைக்கு உரை கண் டவர் இருவர். ஒருவர் பரிமேலழகர் மற்றொருவர் நச்சி னார்க்கினியர். இவர்தம் உரையைத் தழுவி எழுந்த உரை கள் பல.


சங்க நூல்களுள் திருமுருகாற்றுப்படையைப் படிப் போர் தொகை அதிகம். அதைப் பொருளுணர்ந்து பயில் வோர் சிலர்; பொருளுணராது ஒதுவோர் பலர். இனிப் பொருளுணர்ந்து ஒதுவோர் தொகை பெருகும். ஏன்? வித்துவான் கி.வா. ஜகந்நாதன் உரை வெளிவந்தமை யான் என்க.


சங்க நூல்கள் பொருளாழம் உடையன. அவ்வாழங் கண்டு அஞ்சுவோர் உளர். அவர்தம் அச்சம் போக்க வந்தவர் நண்பர் ஜகந்நாதன் என்று கூறல் உயர்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/5&oldid=644026" இலிருந்து மீள்விக்கப்பட்டது