பக்கம்:வழிகாட்டி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - வழிகாட்டி


அறிந்துகொள்வதுகூட அவர்களுக்கு இயலாத காரியம். பிரசங்கம் செய்யும் தோரணையில் விளக்கம் இருந்தால் அவர் களுக்கும் பிறருக்கும் இந்நூல் விளங்குமென்பதே என் கருத்து. இப்புத்தகத்தில் நூலைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு முதலில் அப்பகுதியில் உள்ள கருத்தை விரிவாகச் சொல்லியிருக்கிறேன். அப்படிச் சொல்லும்போது நூலில் வரும் சொற்களில் பலவற்றை இடையிடையே விரவச் செய்திருக்கி றேன். பிறகு மூலத்தையும் அதன் பொழிப்புரையையும் அரும் பதங்களின் உரையையும் கொடுத்திருக்கிறேன். நூலோடு தொடர்ந்து செல்லும் இந்த விளக்கத்தை யல்லாமல், அறிமுகம் என்ற ஒன்றை முன்பு காணலாம். அதில் நூல் முழுதும் பரவியுள்ள செய்திகளை வகைப்படுத்திய பிழம்பாகக் காட்டியி ருக்கிறேன்.


இத்தகைய நூலுக்கு நான் விளக்கம் எழுத முற்படுவது பேதைமையானாலும், முருகன் திருவருளும் என் ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமி நாதையரவர்கள் கருணையும் எனக்குத் துணை நிற்குமென்ற தைரியமே என்னை இத்துறையில் புகச் செய்தது.


இப்புத்தகத்துக்கு அன்பு கூர்ந்து சிறப்புரை வழங்கிய தண் டமிழ்ச் சான்றோராகிய திரு.வி.க. அவர்கள்பால் நன்றி பாராட்டுங் கடப்பாடுடையேன்.


இந்நூல் வெளியாவதில் மிக்க ஆர்வம் காட்டிய அல்ல யன்ஸ் கம்பெனி உரிமையாளரான பூரீ குப்புசாமி ஐயரவர் களுடைய அன்பை நான் பாராட்டுகிறேன். இதனை எழுதி வருகையில் என் அன்னையார் நோய்வாய்ப் பட்டிருந்தார்கள். எழுதும்போது அவர்கள் மனமார ஆசி கூறினார்கள். புத்தகம் முற் றுவதற்குள் அவர்கள் வாழ்வு முற்றியது. இதனை அவர்கள் ஞாபகக் குறிப்பாக அர்ப்பணம் செய்கிறேன்.


முருகன் திருவருள் யாண்டும் மலிவ தாகுக!


3.1. 1947 கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/8&oldid=644033" இலிருந்து மீள்விக்கப்பட்டது