பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 15

போனலும் அது தொடர்ந்து அளித்த வேதனை, வருடக்கணக் காக வந்து கொண்டேயிருந்தது. மருத்துவரின் அறிவிப்புக் குப் பிறகும், மருந்துக்குப் பிறகும், மாதாவின் அன்புப்பணி யும் அந்த இளைஞனத் தொடர்ந்தே வந்தது.

ஆமாம்! ஒவ்வொரு நாளும், இரவிலும் அதிக நேரம் விழித்திருந்து, ஒய்வு கிடைக்கும் பொழுதெல்லாம், மகனின் கால்களை தடவிக் கொடுத்துக் கொடுத்து பணிவிடை செய்து வந்தாள்! அன்னையின் புனித நெஞ்சத்தின் ஆசையும், அன்பு மீறிடும் இடைவிடாப் பணியும், அந்தச் சி று வ னு க் கு ஆறுதலைக் கொடுத்ததுடன், ஆற்றலையும் மனதுக்கு அளித் துக் கொண்டே வந்தது.

தாயின் தனிச்சக்தி தந்த தெம்பும், தழும்பாகிப்போன ரணமும், அவனை நிற்கும் நிலையில் நிறுத்தியது. கால்களைத் தாங்கித் தாங்கி நடக்கத் தொடங்கினன். காலில் தசைகள் வளரத் தொடங்கியது. கெண்டைக்கால் சதையும் வளர்ந்து, உடலேத் தாங்கும் சக்திக்கேற்றவாறு சிறிது பலம் பெற்றுக்கொண்டது.

பதினன்காம் வயது வரை இந்த போராட்ட வாழ்வில் இருந்த கன்னிங்காம், வேகமாக நடக்க, ஒ டி ட ப் ப ழ கி க் கொண்டான். அதாவது முன்னர் ஒடிய ப ழ க் க த் ைத த் தொடர்ந்து கொண்டான்.

ஒரு நாள் கடை ஒன்றில், தங்கப்பதக்கம் ஒன்று பார் வைக்காக வைக்கப்பட்டிருந்தது. எல்கார்ட் நகரத்தில் நடக்க விருக்கும் ஒரு மைல் பந்தயப் போட்டிக்கான தங்கப்பதக்கம் அது. அதில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று விரும்பினன். ஒட்டப்பந்தயங்களில் கலந்து கொள்ளவேண் டும் என்ற வேகத்துடன் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தான்.

அவ்வப்போது நடைபெறுகின்ற போட்டிகளில் கலந்து கொண்டு பல சுவையான அனுபவங்களைப்பெற்று, தன்னையும் வளர்த்துக்கொண்டான். பந்தயம் தொடங்க இருக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த இளைஞன், குதித்துக்