பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 37.

அந்தபோட்டிகளில் கலந்து கொள்ள ஜெர்மனிக்கு வந்திருந்: தான்.

முதல் போட்டியான 100 மீட்டர் ஒட்டத்தில் 10.3 விடிைகளில் ஒடி, உலகசாதனை பொறித்த ஜெசி ஒவன்ஸ் தங்கப்பதக்கத்தைப் பெற்று, இட்லரின் வெறிப்பேச்சுகளை முறியடித்து, வெற்றிக்கொடி நாட்டினன். அடுத்து, அவனுக்கு மிகுந்த சோதனை நிறைந்த போட்டியாக நீளத்தாண்டும் போட்டி வந்தது.

உலக நாடுகளுக்கிடையே இருந்துவரும் வீரர்கள் அனைவரையும் முதலில் தாண்டச் செய்து, தகுதிபெற’ சோதனை செய்வார்கள்.

அதிலேதான் அந்த நிகழ்ச்சி நடந்தது. அங்கு மொழிக் குழப்பம் இருக்கும். அவரவர் தாய்மொழியில்தான் பேசிக் கொள்வார்கள். ஆங்கிலம் அவ்வப்பொழுதுதான் வெளிப்

படும்.

நீளத்தாண்டலுக்குத் தயாராக இருந்த ஜெசி ஒவன்ஸ், நடுவர் அழைத்தவுடன் தாண்டப் போனல், தாண்டுவதற் குரிய நேரம் முடிந்து விட்டதென்று, அதிகாரிகள் கூறி, வெப்புக் கொடியைக் காட்டி விட்டனர். ஆகவே, முதல் வாய்ப்பு (Chance) முடிந்து போயிற்று. அதிகாரிகளை எதிர்த்துப் பேசமுடியாதல்லவா! அவர்கள் திட்டமிட்டபடி, முதல் வாய்ப்பைக் கெடுத்து விட்டார்கள்.

அடுத்த வாய்ப்பு வந்தது, அதில் சரியாகத் தாண்டவில்லை. அதாவது, தாண்டக் கூடிய இடத்தில் உள்ள கோட்டினை மிதித்தாகிவிட்டது என்று (Foul) குற்றத்தைக் கூறி அந்த வாய்ப்பையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆக, அந்தப் போட்டியில் கலந்து கொள்ள இனி ஒரே ஒரு வாய்ப்புத்தான் இருந்தது.

எல்லோருடைய முகத்திலும் கவலைக்குறி தென்படத் தொடங்கியது. ஜெசி ஒவன்சின் பயிற்சியாளர்க்கு என்ன