பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 எஸ். நவராஜ் செல்லையா

“நான் உலகத்திலே இது வரை யாரும் சாதிக்காத அளவில் பெரிய வீராங்கனையாகத் திகழ வேண்டும். இது தான் அவளது நினைவாக கனவாக, உயிர் மூச்சாக இருந்து கொண்டே இருந்தது. அதற்கான வாய்ப்பும் வசதியும் வந்தபாடில்லை. என்ருலும் எரியும் கனலாக இதயத்திலே பெருகிக்கொண்டே இருந்தது.

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது ஒரு நாள் மாலை வேளையில் விளையாட்டு மைதானம் நோக்கிப் போனுள். பலர் அங்கே பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அங்கே நீண்ட கம்பு ஒன்று கீழே கிடந்தது. அதைப் பார்த்து இது என்ன? என்று ஆச்சரியமாகக் கேட்டாள். பயிற்சி யாளர் அவள் கேட்ட ஆர்வத்தைப் பார்த்து மகிழ்ந்து, இது ஜேவலின் (வேல் கம்பு) என்ருர். பிறகு இப்படித்தான் எறிய வேண்டும் என்று எறியும் முறைகளை விளக்கிக் காட்டி எறிந்தும் காட்டினர்.

விளக்கங்களை நன்ருக மனதிலே வாங்கிக்கொண்டாள் அந்த மாணவி. ஓரிருமுறை ஓடிவந்து எறியும் முயற்சி செய் தாள். பிறகு அவள் வேகமாக எறிந்தும் காட்டினள். அதை அளந்து பார்த்த பயிற்சியாளர், இவ்வளவு தூரம் யாரும் இதுவரை எறிந்ததில்லையே. இந்த தூரம் த ற் .ெ பா ழு து குறித்து வைக்கப்பட்டிருக்கும் உலக சாதனைக்கு இணையாக இருக்கிறதே என்று கூறி பாராட்டி னர். வியப்பினல் தன்னை மறந்த பயிற்சியாளர், அதன்பின் அவளை பயிற்சி செய்யுமாறு வேண்டிக்கொண்டார்.

அவளது விளையாட்டுத் துறை பிரவேசம் வெற்றிகரமாக நடைபெற்றது. என்னென்ன போட்டி நிகழ்ச்சிகள் உண் டோ, அத்தனையிலும் போட்டியிடவேண்டும், வெற்றிபெற வேண்டும் என்ற முடிவினைக் கொண்டவள் அல்லவா! ஆகவே, அத்தனைப் போட்டிகளைப் பற்றியும் தெரிந்துகொண்டாள். புரிந்துகொண்டாள். பயிற்சி முறைகளையும் அறிந்து கொண்டாள்.