பக்கம்:வழிப்போக்கன்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

முடியுமா? இருவரும் பகல் வேளைகளில் வால்மீகி இராமாயணத்தைப் படித்து விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

அன்று வெள்ளிக்கிழமை. காலை ஒன்பது மணி இருக்கும். சர்மா பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு வாசல் வர்ாந் தாவில் உள்ள ஈளிசேரில் அமர்ந்தவண்ணம் விஷாரம் சாயபுவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது தபால்காரர் இரண்டு கவர்களைக் கொண்டுவந்து சர்மாவிடம். கொடுத்துவிட்டுப் போனார், ஒன்றின்மீது "சகுந்தலா C/o. நடேச சர்மா என்றும், இன்னொன்றின்மீது நடேச சர்மா, என்றும் விலாசம் எழுதப்பட்டிருந்தன.

கல்கத்தாவுக்கு மாற்றலாகியிருந்த அவருடைய மாப் பிள்ளை எழுதியிருந்த கடிதம் ஒன்று. சகுந்தலாவின் பெயருக்குக் காமு எழுதியிருந்த கடிதம் இன்னொன்று.

"சகுந்தலா!" என்று அழைத்த சர்மா அவள் அருகில் வந்ததும் "இந்தா, பெருந்துறையிலிருந்து உனக்குக் கடிதம் வந்திருக்கிறது. காமு எழுதியிருக்கிறாள் போலிருக்கிறது" என்று கவரை அவளிடம் கொடுத்தார். சகுந்தலா ஆவலுடன் கவரை வாங்கிப் பிரித்தாள்.

"என் அன்புள்ள சகுந்தலாவுக்கு காமு. அநேக ஆசீர் வாதம்.

உன்னுடைய அன்பினாலும் ஆதரவினாலும் நான் பிழைத்தெழுந்து விட்டேன். நீ அனுப்பியிருந்த முன்னூறு ரூபாயும் கிடைத்தது. சர்மா மாமாவுக்கு என் நமஸ்காரங்களைச் சொல்லவும். அவருக்கு உடம்பு குணமாகிவிட்டது என்பதை அறிய மிக்க சந்தோஷம். நானும் ‘அண்ணு' வும் என் அப்பா அம்மாவும் நாளை ரயிலுக்குப் புறப்பட்டு ஆற்காட்டுக்கு வருகிறோம்.

என் வாழ்நாளில் உன்னை என்னால் மறக்கவே முடியாது. உன் அன்பும் உதவியும் இல்லையென்றால் நான் பிழைத் திருக்கவே மாட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/127&oldid=1313660" இலிருந்து மீள்விக்கப்பட்டது