பக்கம்:வழிப்போக்கன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

“இதோ பாரு!”

“ரொம்ப அழகாயிருக்கு!இந்தத் தாமரை மலருக்கு என்ன வர்ணம் கொடுப்பாய்? தாமரைன்ன அசலாயிருக்கணும்!”

“எனக்கு ஒரு ஐடியா தோண்றது!”

“என்னது?”

“நீ அப்படியே கொஞ்ச நேரம் இங்கே நில்லு; பூவிதழ் போன்ற உன் உதட்டிலிருந்து அதை நான் எடுத்துக்கிறேன்!”

“போ...டா!”

சட்டென நாக்கைக் கடித்துக் கொண்டாள் சகுந்தலா. மறுகணமே அந்த ‘டா’வை நீக்கிவிட்டுப் “போ, சுந்தர்!” என்று கொஞ்சும் மொழியில் கூறினுள்.

பின்னர், “வண்டுக்குக் கறுப்பு வர்ணம் வேண்டுமே, அதற்கு என்ன செய்வே?” என்று கேட்டாள்.

“உன் கருங் கூந்தலிலிருந்து எடுத்துக்கொள்வேன்!” என்று அவள் சடையைப் பற்றி இழுத்தான் அவன்.

“சுந்தர், என் பின்னலை விடு!”

“விடமாட்டேன்!”

“விடப்போறியா, தாத்தாவைக் கூப்பிடட்டுமா?”

“கூப்பிடு; தாத்தாதான் கீழே இல்லையே?”

“அது உனக்கு எப்படித் தெரியும்?”

“அவர் இருந்தால் நீ வந்திருப்பியா?”

“ஓகோ அந்தத் தைரியம்தானா? அவர் கதை கேட்கப் போயிருக்கார்னு தெரியுமா உனக்கு?”

“அது சரி; நீ இப்போ ஏன் இங்கே வந்தே?”

“எதுக்கோ வந்தேன்!”

“சொல்லப் போறியா இல்லையா? இல்லே, இந்த விளக்கை அணைச்சுடட்டுமா?” அவளைப் பயமுறுத்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/22&oldid=1315917" இலிருந்து மீள்விக்கப்பட்டது