பக்கம்:வழிப்போக்கன்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60


யுடன் ஜோடியாகச்சென்று பெரியோர்களை வரிசைக்கிரமமாக நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தனர்.

கங்காதரய்யரையும் பார்வதி அம்மாளையும் நமஸ்கரித்த போது, சகுந்தலாவின் கண்ணில் நீரே பெருகிவிட்டது;பார்வதி அம்மாளுக்கும் கூடத்தான்!

சாப்பிட்டு முடித்த மறுகணமே சகுந்தலா மாடியறைக்குச் சென்று விட்டாள். இனி இரண்டு மணி வரை அவளுக்கு ஓய்வுதான். மணப் பந்தலில் உட்கார்ந்தபடியே சுந்தரின் வரவை எதிர்பார்த்து எதிர்பார்த்துப் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருந்தாள் அவள்.

மன அமைதியின்றிச் சுந்தரின் அறைக்குச் சென்றவள் கதவை ஒருகணித்துச் சாத்திக்கொண்டாள். கழுத்திலிருந்த மணமாலையைக் கழட்டி, சுவரிலிருந்த ஆணியில் மாட்டினாள். அப்போது அவளுடைய அடி வயிற்றிலிருந்து துக்கம் பொங்கி வந்தது. அந்த இடத்தில்தான் சுந்தர் தன் சட்டையை மாட்டி வைப்பது வழக்கம். சோகத்தின் சிகரமாக, உணர்ச்சிகளின் உறைவிடமாக, ஏமாற்றத்தின் சின்னமாக, ஏக்கத்தின் வடிவமாக, சுந்தரின் நாற்காலியில் அமர்ந்து கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள் அப்பேதை! யாரோ கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரும் ஓசை; திரும்பிப் பார்த்தபோது...

அவன் மவுனமாக வந்து அவளுக்கு எதிரேயிருந்த மேஜை மீது அமர்ந்துகொண்டான்.

"சுந்தர்!"

அவனுடைய கைகளைப் பற்றிக் கொள்ளும் ஆவலோடு எழுந்ததாள் அவள்; அவளுடைய பிடியிலிருந்து விலகிக் கொண்டான் அவன்!

"சுந்தர், நீ ஏன் நேற்றே வரவில்லை? உன்னைக் காணாமல் எவ்வளவு நேரமாக நான் அழுதுகொண்டிருக்கிறேன். தெரியுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிப்போக்கன்.pdf/60&oldid=1320962" இலிருந்து மீள்விக்கப்பட்டது