உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 113 பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மற்றும் பல்வேறு சமயத் தலைவர்களும் கலந்து கொள்ளவில்லையா? இங்கே கபாலீஸ்வரர் கோவிலில் நானும் தலைவர் மூப்பனார் அவர்களும், குன்றக்குடி அடிகளாரும், நல்லக்கண்ணு அவர்களும், பல்வேறு சமுதாயத் தைச் சேர்ந்த நண்பர்களும் தாய்மார்களும் அமர்ந்து உணவருந்த வில்லையா? அந்தச் சமத்துவம் எங்கிருக்கிறதோ, அந்த இடத் திற்கு நான் செல்ல என்றைக்கும் மறுக்க மாட்டேன். ண இங்கே நான் படித்துக் காட்டினேனே - வெள்ளி விழா மலரி லே இருக்கின்ற வாசகம் - “கடவுள் நம்பிக்கையும் பக்தி முயற்சிகளும் கண்மூடித் தனமான செயல்களால் கேலிக்குள்ளாகி வருகின்றன." என்ற அந்த வாசகம் இருக்கிறதே, இந்த அடிப்படையிலேதான் நான் அன்றைக்கு பராசக்தியில் எழுதினேன். வ "கோயில் கூடாது என்பதல்ல; கோயில் கொடியவர்களின் கூடார மாக இருக்கக் கூடாது” என்று வசனம் எழுதினேன். அதை இந்த அடிப்படைத் தத்துவத்தின் படிதானே நான் அன்றைக்கே 45 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன். எனவேதான் இந்த மார்க்கம் எங்கள் மனதைக் கவருகிறது. ஒருமுறை ஒரு மத விழாவிற்கு - மத விழா என்றால் மதத்தை மாத்தி ரம் பரப்புகின்ற அல்லது மற்ற மதங்களை வெறுக்கின்ற மத விழா அல்ல. ஒரு நிகழ்ச்சிக்கு திருவாரூருக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்திருந்தார்கள். அண்ணாவிற்கு முன்பு பேசியவர்கள் தங்கள் மதத்தைப் பற்றிய சில அற்புதங்களை எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். QIT T இறுதியாகப் பேசிய அறிஞர் அண்ணா சொன்னார்கள். "அற்புதங்கள் இருப்பதற்காக உங்கள் மத விழாவிற்கு நான் வரவில்லை; இந்த விழாவிற்கு நான் வரவில்லை. அற்புதங்கள்