உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 119 யாசமானதுதான். அந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு -அவர் கடந்த. ஆண்டு இந்த அரங்கத்திலே ஆற்றிய உரையைக் கேட்ட பிறகு - ஆழ்வார்களுடைய பாடல்கள் ஜெகத்ரட்சகனை எந்த அளவிற்கு - ஒரு நல்ல தமிழறிஞராக மாற்றியிருக்கிறது என்பதை எண்ணி யெண்ணி மகிழ்ந்து அப்போதே பாராட்டியவன் நான். எனவே அந்த ஆழ்வார்களுடைய நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திரா வேதம் என்று யாரால் சொல்லப்பட்ட தென்றால், இராமானுசரால் சொல்லப்பட்டது. அந்தத் திராவிட வேதம் இன்றைக்கு வைணவக் கோவில்களில் எல்லாம் பாடப்படு கிறது, படிக்கப்படுகிறதென்றால், அதற்கு மூலக் காரணமாகத் திகழ்பவர் இராமானுசர்தான். அவர் ஆன்மிகவாதிதான். ஆன்மிகவாதி என்றாலுங்கூட, அந்த ஆன்மிகத்தோடு கலந்து அவர் அளித்த கருத்து சாதாரண மானதல்ல. இங்கே நம்முடைய ஆர்.எம்.வீ. அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல, உத்தமர் காந்தியடிகள் ஆலயப் பிரவேசம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்து - அதை நிறைவேற்றுவதற்கு முன்பு - 850 ஆண்டுகளுக்கு முன்பு அதை கர்நாடக மாநிலத்திலே நடத்திக் காட்டியவர் இராமானுசர் அவர்கள் ஆவார்கள். கர்நாடக மாநிலத்தில் திருநாராயணபுரம் என்று அன்றைக்கு அழைக்கப்பட்டு - இன்றைக்கு மேலக்கோட்டை என்று அழைக்கப் படுகின்ற அந்த ஊர்க் கோவில்களில் ஆதிதிராவிடர்கள் - தாழ்ந்த சாதிக்காரர்கள் நுழையக் கூடாது என்ற தடையை அகற்றி - ஆலயப் பிரவேசத்தை காந்தியடிகளுக்கு 850 ஆண்டுகளுக்கு முன்பு நடத்திக்காட்டிய பெருமை ஒருவருக்கு உண்டு என்றால் அது இராமானுசர் ஒருவருக்குத்தான் உண்டு. அத்தகைய சீரிய, செழுமிய, புரட்சிகரமான கருத்துக்களுக்குச் சொந்தக்காரராக அவர் விளங்கினார். ய அவர் திருவரங்கத்திலே வாழ்ந்த காலக் கட்டத்தில் உறங்கா வல்லிதாசர் என்று ஒருவர் அவருடைய பிரதம மாணவராக