உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مين அன்னை தெரசாவின் க படத்திறப்பு வேறு பல அலுவல்கள் காலை முதல் இருந்த காரணத்தால் சற்று காலந்தாழ்ந்து வர நேரிட்டது. அந்த அலுவல்களை மீண்டும் தொடர வேண்டிய காரணத்தால் இடையிலேயே அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் அன்னை தெரசா மறைவையொட்டி சென்னைத் தொலைக் காட்சியிலும் வானொலியிலும் என்னிடம் இரங்கல் உரை கேட்ட போது நான் சொன்ன வாசகம் "பருந்துகளும் கழுகுகளும் வட்ட மிடும் இந்த உலகத்தில் சமூக சேவை எனும் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த அன்னப்பட்சி மறைந்துவிட்டது' என்று குறிப்பிட்டேன் அன்னம் ஒரு பறவையையும் குறிக்கும். அன்னம் அன்னை தெரசாவையும் குறிக்கும். அன்னம், அவர்கள் ஏழையெளிய மக்களுக்கு அளித்த உணவையும் குறிக்கும் இப்படி எல்லா வகையிலும் வெண்புறாவாக - சமாதானப் பறவையாக ஏழைகளை உறவினராகக் கொண்டிருந்த நலிந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய அன்னை தெரசா அவர்கள் மறைந்து; விட்டார் என்று சொல்வதைவிட நம் அனைவருடைய மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் நிறைந்துவிட்டார் என்று சொல்வதுதான் பொருத்தமுடையதாகும். உலக