உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வழி மேல் விழி வைத்து... நாட்டின் விடுதலைக்காக எந்தத் தலைவரோடு ஒன்றி நின்று போராடினேனோ அந்த என் அருமைத் தலைவர் மகாத்மா காந்தி அவர்களின் நினைவுகூட எனக்கு வர வில்லை. என் உயிருக்குயிரான உற்ற தோழர் ஜவகர்லால் நேரு அவர்களின் எண்ணமும், என் நெஞ்சில் எழ வில்லை. ஏன், எனக்கு நெருக்கமான என் உற்றார், உறவினர் எவரைப் பற்றிய சிந்தனையுமே எனக்கு வர வில்லை. ஆனால் எனது அலுவலகத்துக்குச் செல்லும் அந்த மாடிப்படிகளில் நான் காலடி வைத்து ஏறும்போது ஒரே ஒரு எளிய உருவம் மட்டுமே என் நெஞ்சம் முழுவ தும் நிறைந்திருந்தது. திக்கற்ற ஏழைகளையும், நோயாளி களையும், குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக, அவர் களின் கண்ணீரைத் துடைப்பதற்காக தம் வாழ்வையே த ஒப்படைத்துக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைக்கிறாரே அந்த தெரசாவின் மெலிந்த வடிவமே என் இதயம், மூளை எல்லாவற்றையுமே சுற்றி வளைத்துக் கொண்டுவிட்டது" என்று பி.சி.ராய் பாராட்டுகிறார். Ta பிறந்தநாளில் காந்தி அடிகளை நினைக்கவில்லை. பண்டித நேருவை பிறந்த நாளில் நினைக்கவில்லை. அன்னை தெரசாவின் உருவம்தான் தன் கண் முன்னால் நின்றது என்று மேற்கு வங்கத்தினுடைய முதலமைச்சர் பி.சி. ராய் சொன்ன இந்த வாசகம் அவருக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. நம் அனைவருக்கும் சொந்தமான ஒரு வாசகமாக ஆகி விட்டிருக்கின்றது. அன்னை அவர்கள் நம்மை விட்டு நீங்கிவிட்டார், பிரிந்து விட்டார் என்று யாரும் கருதத் தேவையில்லை. அவருடைய உழைப்பு; ஓய்வற்ற சேவை, ஏழை மக்கள்பால் கொண்டிருந்த இரக்கம், அன்பு நோயாளிகளிடம் காட்டிய பரிவு, நலிந்தோரிடத் திலே அவர் கொண்டிருந்த நாட்டம் இவைகள் எல்லாம் அன்னை யின் வடிவிலே நம்முடைய உள்ளத்திலே பதிந்திருக்கின்றன.