உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு.கருணாநிதி 135 விழாவினை நடத்தினால் இந்த மன்றமும் போதாது, கலைவாணர் அரங்கமும் போதாது; பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்ட பமே தேவைப்படும் என்பதை நான் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற விழாக்கள் ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந் தால், அந்த விழா நடப்பதை விளம்பரம் மூலமாக அறியாதவர் கள்கூட சாலை வழியாகச் செல்பவர்கள் ஏதோ ஒலிபெருக்கி ஓசை கேட்கிறதே, என்னவென்று பார்ப்போம் என்று மண்டபத்திற்குள் நுழைவார்கள். இந்த மண்டபம் இருக்கிற அமைப்போ உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியே போகிறவர்களுக்கு தெரியாத நிலையிலே உள்ள அமைப்பு (கைதட்டல்). இதை நான் நண்பர் சாவி அவர்களிடம் சொன்னேன் இதிலே ஏன் இவ்வளவு சிக்கனம், கொஞ்சம் விளம்பரம் செய் திருக்கக் கூடாதா? பாரதியார்தான் சிக்கனமாக வாழ வேண்டிய நிலையிலே இருந்தார்; பாரதி விழா நடத்துபவர்களும் அந்த நிலையிலா இருக்கிறார்கள்? என்று நான் அவர்களிடத்தில் கேட் டேன். இருந்தாலும் இங்கே வந்துள்ள ஒவ்வொருவரையும் ஆயி ரம் பேருக்கு சமமாகக் கருதிக்கொள்ள வேண்டும் என்று நண்பர் கல்கி ராஜேந்திரன் சொன்னார். (சிரிப்பு) இதிலே என்ன? ஆசைப் படுவதுதான் ஆசைப்படுகிறோம்; ஆயிரம் பேர் என்ன? (பலத்த சிரிப்பு ) ஒவ்வொருவரையும் பத்தாயிரம் பேருக்கு, லட்சம் பேருக்கு சமமாக எண்ணிக்கொண்டு நான் பேசுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது இந்த விழா நிகழ்ச்சியிலே திரு மகாலிங்கம் அவர்களாலும், கவிதை படித்த திருமதி ஆண்டாள் பிரியதரிசினி அவர்களாலும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அமைச்சர் வருகிற விழாக் களில் கோரிக்கைகள் இடம் பெறுவது இயல்பு. அதிலும் முதலமைச்சரே வந்தால் ஒருவேளை கோரிக்கை வைக்காவிட்டால் கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சத்தின் காரணமாக கோரிக்கை களை வைக்கிறார்கள்.