உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வழி மேல் விழி வைதது... காலையில் ஜட்டியோ அல்லது ட்ரவ்சரோ போடும்போது ஒரே நேரத்தில் போட முடியாது. போடும் போதே அந்தக் காலா, இந்தக் காலா என்று சந்தேகம் வந்துவிடும். அதாவது தனிப்பட்ட, சொந்த, எல்லோருக்கும் தெரிந்த - ஆனால் நாம் சொல்லாத விஷயங்களை - தம்பி முத்து சொல்லியிருப்பதைப் வைரமுத்து பார்த்துத்தான் ஆச்சரியப்படுகிறேன். தொடர்ந்து எழுதுகிறார். “சீப்போடு என்னதான் சிநேகம் பிடித்தாலும் ஒரே வகிர்வில் வகிடு கொண்டதில்லை” இது எனக்குத் தேவையில்லை. (பலத்த சிரிப்பு, கைதட்டல்) வைரமுத்துவின் அனுபவத்தைக் கூறுகிறார். அந்த அனுபவம் எனக்கும் ஒரு காலத்திலே இருந்தது. "சீப்போடு என்ன தான் சிநேகம் பிடித்தாலும் ஒரே வகிர்வில் வகிடு கொண்டதில்லை" என்கிறார். எதற்குச் சொல்ல வருகிறார் என்று பாருங்கள். "எது உள் எது வெளி பட்டிமன்றம் முடியாமல் காலுறை அணிந்ததில்லை” கால் உறை (சாக்ஸ்) அணியும்போது எது உள்பக்கம். எது வெளிப் பக்கம் என்பதற்கு 'பட்டிமன்றம்' முடியாமல் அது தெரிவ தில்லையாம். அதற்கு ஒரு பட்டிமன்றமே தமிழ்க்குடிமகனை தலைவராக வைத்து அதை அணிய வேண்டும் என்கிறார். ஒவ்வொருவருடைய அனுபவம் இது. "ஓடும் ரயிலில் பிடிமான மில்லாமல் சிறுநீர் கழிக்கும் திறனுமில்லை" .