உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வழி மேல் விழி வைத்து... 89-91 இரண்டாண்டுக்கால தி.மு.கழக ஆட்சியில் 5 கல்லூரி கள். பிறகு 91 முதல் 96 வரையிலான கடந்த கால ஆட்சியில், ஐந்தாண்டுகளில் தொடங்கப்பட்ட சுயநிதிக் கல்லூரிகள் 65 96க்குப் பிறகு இந்த 15 மாத காலத்தில் தொடங்கப்பட்ட சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் 59, (கைதட்டல்) இதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பொறியியல் கல்லூரிகள் என்று எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு இந்தக் கழக ஆட்சியிலே 10 கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 39 கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகத்தில் 10,000 மாணவர்கள் கூடுதலாக பொறியியல் கல்லூரிகளில் படிக்கக்கூடிய வசதிவாய்ப்பை இந்த அரசு செய்து கொடுத்திருக்கிறது. அதுமாத்திரமல்ல; பொறியியல் கல்லூரியிலே சேருவதற்கு கிராமப்புறத்து மாணவர்களுக்கு வாய்ப்பு குன்றிப் போயிருந்தது. குறைந்து போயிருந்தது. அந்த வாய்ப்பை அதிகப்படுத்துவதற்காக முதல் கட்டமாக பொறியியல் கல்லூரிகளில் கிராமப்புறத்து மாணவர்களுக்கு கட்டாயம் 15 சதவிகிதம் இடமளித்தே ஆக வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தி - அதை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு எல்லாம் சென்றாலும்கூட கடைசியாக அரசின் கருத்துத்தான் வெற்றி பெற்றது என்ற அளவிலே - 15 சதவிகித கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற் கான நிலைமையும் இன்றைக்கு உருவாகியிருக்கிறது . அதுமாத்திரமல்ல; இந்த அரசினுடைய இன்னொரு அறி விப்பும் உங்களுக்குத் தெரியும் என்று கருதுகிறேன். அது நடை முறைக்கு வந்திருக்கிறது. கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டு இப்பொழுது அமலாக்கப்பட்டுள்ள அந்த முக்கியமான அறிவிப்பு என்னவென்றால், எந்த ஒரு குடும்பத்திலும் பட்டதாரிகளே இல்லாமலே இருந்து - முதல் பட்டதாரி இவர்தான் என்கிற அளவிற்கு இருக்கிற பட்டதாரிகள் வந்தால், அவர்கள்