உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வழி மேல் விழி வைத்து... பொறுப்பு ஏற்கின்ற நிலைமையை உருவாக்கி - பெரியாருடைய கொள்கைகளான சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்படி செல்லுபடியாக்குவது; இருமொழித்திட்டம்; இந்த நாட்டிற்கு 'சென்னை ராஜ்யம்' என்ற பெயரை மாற்றி 'தமிழ்நாடு' என்று பெயர் வைப்பது; அதைப்போல 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டு மாநாட்டில் பெரியார் நிறைவேற்றிய தீர்மானம் - பெண்களுக்கும் ஆண்களைப்போல சொத்துகளிலே சமஉரிமை வேண்டும் என்பதாகும் - அந்தத் தீர்மானத்தை 89 ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நான் நிறைவேற்றியபோது சொன்னேன். "அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தை இன்றைக்கு சட்டமாக்குகிறோம்." என்று சொன்னேன். அதைப்போல உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள், பெண்களுக்கு விகிதாச்சாரம் வேண்டும் என்று அதை செயல் மூலம் காட்டி, முப்பது சதவிகிதம் உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்து பெரியாரின் கொள்கைகளை நாம் நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம் மேலும் நிறைவேற்றுகிற நேரத்தில், இளம் பயிர்களெல்லாம் தந்தை பெரியாரின் அந்த அறிவுக் கருத்துக்களைப் பெற்று செழிக்கத்தான் இந்தப் பல்கலைக்கழகம். தம்பி வீரபாண்டி ஆறுமுகம், அவர் அமைச்சர் என்றாலும் கூட முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைக்க வேண்டும், கல்வி அமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைக்க வேண்டும், ஆளுநருக்கு ஒரு கோரிக்கை வைக்க வேண்டும் என்ற முறையில் எங்கள் மூவர் முன்னிலையிலே ஒரு கோரிக்கை வைத்தார். " "பெரியார் பல்கலைக் கழகத்திற்கு இருக்கின்ற பாடத் திட்டங்களிலே பெரியாரின் கொள்கைகளைப் பரப்புகின்ற அளவிற்கு பாடத் திட்டங்கள் வேண்டும்' என்றார்.