உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 வழி மேல் விழி வைத்து... உண்மையை நான் அன்றைக்கு ஒத்துக் கொண்டேன். இருந்தாலுங் கூட நான் புலமை மிக்கவன்தான் என்று நம்முடைய டாக்டர் சி. பாலசுப்பிரமணியம் அவர்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்தவரே தமிழின் அடிப்படை யிலே எனக்கு அந்தச் சான்றினை வழங்கியிருக்கிறார். நான் பொருத்தமுடையவனோ இல்லையோ, அவர் வழங்கிய காரணத் தால் வருத்தமுடன் ஏற்றுக் கொள்கிறேன். (கைதட்டல்) டாக்டர் வ. செ. குழந்தைசாமி அவர்கள் - அவர் சென்னை யிலும் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்தார்; பிறகு இவருடைய திறமையைக் கண்டு, அவருடைய ஆற்றல் கண்டு புதுடெல்லியிலே இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக் கழகத்திற் கும் துணை வேந்தராக அன்றைக்கு நியமிக்கப்பட்டார். பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்களில் பல சிறப்புக்களும், பெரும் ஆற்றலும் வாய்ந்தவர் குழந்தைசாமி அவர்கள், அவர் இங்கே ஆற்றிய உரை கண்டே நீங்கள் அதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். நானோ பல்கலைக் கழகம் என்ன, கல்லூரிக்கே செல்லாத வன். கல்லூரிக்கே செல்லாத என்னை அவர் உரையின் மூலம் ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியனாகவே படம் பிடித்து இங்கே காட்டியிருக்கிறார். அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன் அவையடக்கத்திற்காக அவர் என்னை, பல்கலைக் கழகப் பேராசிரி யனாக ஆக்கினாலும் கூட, நான் நன்றியோடு அதையேற்று மகிழ்கிறேன் என் தம்பி வைரமுத்து, என்னை தமிழ் ஆசான், தமிழ் ஆசான் என்றழைத்தே எனக்கு பெருமை தேடித் தருபவர். எப்படி யென்றால் அவருடைய கவிதையாற்றலை, அவருடைய புலமையை, அவருடைய திறனை, அவருடைய கற்பனை வளத்தை, அவருடைய புதிய சிந்தனைகளை இன்றைக்கு தமிழகமே போற்றிப் பாராட்டிக் கொண்டிருக்கும் போது - அவர் என்னை ஆசான் என்று சொல்வதால் எனக்கு