உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 15 செய்தி உண்டு. எனவே அந்த உள்ளுணர்வை வைத்துதான் தம்பி வைரமுத்து “எங்கே உனக்கு முன் மனிதர் விழிப்பரோ, அங்கே தோன்றுக கதிரவனே" என்று பாடுகிறார். அதே பாட்டில் இன்ப LO “எங்கே விதவையர் கூந்தல் காயுமோ அங்கே மலருக பூவினமே"

என்றும் எழுதியிருக்கிறார். இது தேசிய கவி பாரதியாரையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் நம் நினைவுக்குக் கொண்டு வருகின்ற கவிதை வரிகளாகும்.f இ - "கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா' என்று விதவையைப் பற்றி புரட்சிக் கவிஞர் பாடிய கவிதையை நினைவிற்குக் கொண்டு வரும் கவிதை இது. அந்தப் பாடலை அல்ல; அந்தக் கருத்தை நினைவிற்குக் கொண்டு வருகிறது, எங்கே விதவையர் கூந்தல் காயுமோ அங்கே மலருக பூவினமே விதவையர் கூந்தலில் பூக்கள் ஏற வேண்டும், பூச்சரம் மிளிர வேண்டும் என்ற அந்தக் கருத்தை உள்ளடக்கிக் கவிஞர் வைரமுத்து ஒரு புரட்சிகரமான எண்ணம் கொண்டவர் சமுதாயத்திற்கு முன்னேற்றம் தேவை என்ற முனைப்பான ஆர்வம் படைத்தவர் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் அவர் அந்தப் பூக்களுக்கு கட்டளையிடுகிறார் என் நினைவிற்கும் உங்கள் நினைவிற்கும் ஒன்று கூற வேண்டும். ஆனந்தவிகடன் பத்திரிகையிலே ஒரு கவிஞன் எழுதியிருந்தான். "அய்யோ விதவை' என்று எழுதினால் அந்த BT . சொல்லுக்குக் கூட பொட்டு கிடையாதே? வி-த-வை என்று எழுதினால் அந்த எழுத்திலே பொட்டு இல்லையே என்று அழுது எழுதினான். அதைப் படித்துவிட்டு நான் ராஜேஸ்வரி மண்டபத் திலே நடைபெற்ற ஒரு விழாவிலே பேசும்போது சொன்னேன் “தம்பீ, நீ விதவை என்று அந்த நிகழ்ச்சியிலேயே வடமொழியிலே