உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 17 யிலேயே நல்ல ஆன்மிகவாதிகளாக விளங்கி இருக்கிறார்கள். ஏன் வள்ளுவரே கூட அவர் முனிவர் அல்ல என்றாலுங்கூட அவர் வாழ்க்கைத் துணையோடு தான் இருந்தார் என்பது தான் நாமறிந்த வரலாறு. 0 அதைப் போல மாண்டவியர் என்ற ரிஷி தன் பத்தினியோடு வாழ்ந்தபோது அழகான பெண் குழந்தை இருந்தது. இவர்களுக்கு பூலோகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஒரு ஆசை வந்தது. அப்படியானால் பெண்ணை அழைத்துக் கொண்டு போக முடி யாது. ஏனென்றால் பூலோகத்தைச் சுற்றிப் பார்க்கும்போது ஆங்காங்கு அரக்கர்கள் இருப்பார்கள்; அவர்கள் கண்ணிலே இந்த பெண் பட நேரிடும். எனவே பத்திரமாக யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போகலாம் என்று யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசித்தார்கள். பரமசிவனிடம் ஒப்படைக்கலாமா என்று யோசித்தார்கள். உடனே மாண்டவியர் சொன்னார். தாருகாவனத்து ரிஷி பத்தினிகளைப் பற்றி நீ கேள்விபட்டதில்லையா? அங்கேயே பரமசிவனைப் பற்றி தவறான கருத்து உண்டு. எனவே தாருகா வனத்து ரிஷி பத்தினிகள் பட்டபாட்டில் நம் பெண்ணை பரம சிவனிடம் ஒப்படைக்கக் கூடாது என்கிறார். (நான் சொல்ல வில்லை, விப்ரபுராணம் கூறுகிறது) சரி, மகாவிஷ்ணுவிடம் ஒப்படைத்து விட்டுப் போகலாம் என்று யோசிக்கிறார்கள். அதற்கு கூடாது, கூடாது, மகாவிஷ்ணு தான் கோபாலகிருஷ்ணனாக உருவெடுத்து கோபிகாஸ்தீரிகளிடம் விளையாடியவர் ; அவரிடமும் இந்தப் பெண்ணை விட்டு விட்டுப் போகக் கூடாது' என்கிறார்கள். T சரி இந்திரனிடம் ஒப்படைக்கலாமா என்கிறார்கள். அய்யோ, அகலிகை கதை தெரியாதா, வேண்டாம் அந்த யோசனை' என்று முடிவிற்கு வந்து இப்படி ஒவ்வொருவராகச் சொல்லி வேண்டாம், வேண்டாம் என்று கைவிட்டு கடைசியாக -