உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 கலைஞர். மு. கருணாநிதி 27 பேரையும் இந்தக் கழுதை தாங்குமாய்யா, கழுதை சாகப் போகிறது' என்று சொன்னான். இரண்டு பேரும் என்ன செய்வதென்று கேட்டார்கள். அதற்கு அவன் கழுதையைத் தூக்கிக் கொண்டு போங்கள் என்று சொன்னதும், இரண்டு பேரும் சேர்ந்து ஒரு கம்பிலே கழுதையை தலைகீழாகக் கட்டித் தூக்கிக் கொண்டு போனார்கள். தூக்கிக்கொண்டு ஒரு ஆற்றோரமாக போகும்போது எவ்வளவு நேரம்தான் கழுதை தலைகீழாகத் தொங்கும். துள்ளி ஆற்றிலே விழுந்துவிட்டது. எனவே எல்லோருடைய பேச்சையும் கேட்டால் கழுதையை ஓட்டிக் கொண்டு போனவன் கதையாக ஆகிவிடும். கேட்க வேண்டிய பேச்சைக் கேட்க வேண்டும். தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைக் கேட்காதே; தீயவற்றைச் சொல்லாதே என்பதைப் போல கேட்க வேண்டியவைகளை கேட்க வேண்டும். நல்லவைகளை கேட்க வேண்டும். நாம் திருந்திக் கொள்ள வேண்டும். அதற்காக செவிகளை மூடுவது சுலபம் என்றுதான் சொல்கிறாரே தவிர மூடிக் கொள் என்று கவிஞர் சொல்லவில்லை. எனவே அந்த வகையிலே நான் அவரைப் பாராட்டுகிறேன். இனத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். "காற்றின் ஈரம் பருகி வாழும் பாலைவனத் தாவரம்" பாலைவனத் தாவரத்திற்கு வேரிலேயா தண்ணீர் ஊற்று வார்கள்? இல்லை. வானத்திலிருந்து மழையா பொழியும்? இல்லை, ஈரக்காற்று அடித்தால்தான் அதற்கு தண்ணீர் கிடைக்கிறது. அதைத் தான் “காற்றின் ஈரம் பருகி வாழும் பாலைவனத் தாவரம் போல்' இது ஒரு விஞ்ஞான அடிப்படையிலே எழுதப்பட்ட கவிதை “காற்றின் ஈரம் பருகி வாழும் பாலைவனத் தாவரம் போல்