உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - வழி மேல் விழி வைத்து... பெற்றுக் கொண்டிருக்கும் போது, நகைச்சுவைக் காட்சியின்போது எல்லோரும் சிரிப்பார்கள். அப்போது எங்களோடு வந்த அந்த சில நண்பர்களும் சேர்ந்து சிரிப்பார்கள். படம் முடிந்து திரும்பி வரும் போது, அண்ணா அவர்களைப் பெயரைச் சொல்லி அழைத்துக் கேட்பார் 'என்னப்பா, நாங்களெல்லாம் சிரிச்சோம், நீ ஏன் சிரிச்சே?' என்று கேட்பார். 'சிரிக்காமல் இருந்தால் மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள் என்பதற்காக சிரித்தோம்' என்பார்கள். அதைப்போல ஹைக்கூ கவிதைகள் என்றால் என்ன வென்று தெரியாத பலபேர் இங்கேயிருப்பது எனக்குத் தெரியும் நான் அதைத் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும் (பலத்த சிரிப்பு) இந்த ஆராய்ச்சி நூலை டாக்டர் சி.பா. அவர்கள் இங்கே அறிமுகப்படுத்தினார் என்பதை விட திருமதி நிர்மலா சுரேஷ் அவர்கள் வாயிலாக ஹைக்கூ கவிதைகள் இன்றைக்கு தமிழகத் திலே அறிமுகப்படுத்தப்படுகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. ஏற்கெனவே என்னுடைய நண்பர் ஈரோடு தமிழன்பனைப் போன்றவர்கள், ஏன் நிர்மலா சுரேஷைப் போன்றவர்கள் ஹைக்கூ கவிதைகளை எழுதி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்ற போதிலும், இந்த விழா மூலம்தான் எப்படி ஜப்பான் நாட்டிலே ஹைக்கூ கவிதைகள் பரவியிருக்கிறதோ அதைப்போல தமிழகத் திலும் ஹைக்கூ கவிதைகள் பரவக் கூடிய காலக்கட்டம் இன்றைக்கு உதயமாகியிருக்கின்றது என்று நான் சொல்ல விரும்புகிறேன். அப்படிப்பட்ட ஒரு அறிமுக விழாதான் ஹைக்கூ கவிதை களுக்கு இன்றைக்கு இங்கே நடைபெறுகின்றது. அவர்களுடைய இந்த ஆராய்ச்சி நூலில் ஹைக்கூ கவிதைகளைப் பற்றி அவர்கள் சொல்லும் போது:- "புரிதல் அரிதானவர்க்கு ஹைக்கூ ஒரு புதிர்! புரிந்த வர்க்குக் கிடைப்பதுவோ புதையல்! விலகி நிற்பவர்க்கு