உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வழி மேல் விழி வைத்து... ரீதியாகத்தான் - ஹைக்கூ கவிதையிலே கற்பனைக்கு இடம் இல்லை என்று நிர்மலா சுரேஷ் வாதாடியிருந்தாலும் கூட - இது அழகான கற்பனை. இந்த ஆராய்ச்சியில் நம் தமிழ்நாட்டிலே உள்ள பல ஹைக்கூ கவிதைகளையும் நிர்மலா சுரேஷ் ஆராய்ந்து, அதிலே தனக்குள்ள கருத்துக்களை வெளியிட்ருக்கிறார். சில மாறுபட்ட கருத்துக்களும் உண்டு. ஆதரவான கருத்துக்களும் உண்டு. குறிப்பாக அறிவுமதி யினுடைய ஹைக்கூ கவிதைகளைப் பற்றி நிர்மலா சுரேஷ் விமர் சித்த நேரத்தில் சிலவற்றிலே தனக்கு உடன்பாடில்லை என்றாலுங் கூட ஒன்றை இது மிக இயல்பாக அமைந்த படிவம் என்று பாராட்டிக் குறிப்பிடுகிறார். அது அறிவுமதியின் ஹைக்கூ கவிதை. "உழுது வந்த களைப்பில் படுக்கும் மாடுகள் காயம் தேடும் காக்கை” . ங்கு மாடு உழுது வந்த களைப்பிலே படுக்கிறது. காயம் தேடும் காக்கை! உழுதுழுது கழுத்தெல்லாம் புண்ணாகி படுத்திருக்கும் மாட்டின் மீது காயம் எங்கே என்று காகம் தேடுகிறதாம்! அதனுடைய கஷ்டம் இதற்குத் தெரியாது. இதனுடைய பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் காக்கை மாட்டை நாடுகிறது என்பதை வெகு அழகாக இங்கே குறிப்பிட்டிருக்கிறார். நிர்மலா சுரேஷ் அவர்களைப் பற்றி நான் என்ன சொல்லி யிருக்கிறேன் என்பதை நம்முடை டாக்டர் மு.பி.பா. அவர்கள் இங்கே எடுத்துக்காட்டினார். திராவிடர் இயக்கத்தின் வேர் நிலைத்த தருவில் பூத்த மலர்" என்று நான் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை இந்தப் புத்தகத்திலே அவர்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். நான் அவ்வாறு குறிப்பிட்டதற்குக் காரணம், பதினைந்து :' ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலா சுரேஷ் என்ற பெயரை நான் பகாமிக