உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வழி மேல் விழி வைத்து... சமத்துவம் வேண்டும் என்ற அந்த உயர்ந்த ஒரு குறிக்கோளை வாயளவிலே, உதட்டளவிலே சொல்லிக் கொண்டிராமல் செயலளவில் காட்டியவர். தன்னுடைய வீட்டிலேயிருந்த பிரா மணச் சமுதாயத்தைச் சேர்ந்த சமையல்காரரை மாற்றிவிட்டு, பூங்காவனம் என்ற பெயருடைய ஒரு ஆதிதிராவிடப் பெண் மணியை சமையல்காரராக ஆக்கிக் கொண்ட பெருமை அம்மை யார் ருக்மணி லட்சுமிபதி அவர்களைச் சாரும். அவர் தன் வாழ்க்கையிலே நகைகளையே அணியாமல் இருந்தார் - அவ்வளவு எளிமையாக இருந்தார் என்று பொன்னம் மாள் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்கள். இவரும் ருக்மணி லட்சுமிபதி அவர்கள் நகைகளை அணியாமல் இருந்ததற்குக் காரணம்; அவருடைய நகைகளை யாரும் கோர்ட்டிலே கொண்டு போய் வைத்து விடவில்லை (பலத்த கை தட்டல்) அதன் காரணமாக நகைகளை அணியாமல் இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இருந்தும், அவைகளை அணியாமல் இருந்தார்; அதுதான் தியாகம். இல்லாததைச் செய்வதாகச் சொல்வதற்குப் பெயர் தியாகம் அல்ல. இருந்தும் அவைகளை அணியாமல் இருந்தார். இருந்தும் அதை இழப்பதுதான் தியாகம். அத்தகைய உத்தமப் பெண்மணியாக மறைந்த ருக்மணி லட்சுமிபதி அவர்கள் விளங்கியிருக்கிறார்கள். ல இங்கே திரு. மூப்பனார் அவர்கள் குறிப்பிட்டதைப்போல சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்கள் முன்னின்று நடத்திய உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் 1930-ஆம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜி அவர்கள் முன்னின்று யாத்திரை செய்த அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கடும் தண்டனைகளை அனுபவித்தவர் ருக்மணி லட்சுமிபதி அவர்கள். அதற்குப் பிறகு 37-ஆம் ஆண்டில் இந்தியாவில் பல மாநிலங்களிலே காங்கிரஸ் ஆட்சி உருவான சமயத்தில் தமிழகத்தில் அன்றையதினம் தமிழகம் என்று சொல்ல இயலாது; சென்னை மாகாணத்தில் மற்ற பிரதேசங்