உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- தமிழகத்தார்க்கெல்லாம், தமிழினத்தார்க்கெல்லாம் வாய்த்தவர்தான் கலைஞர் அவர்கள். அவருடைய மேடைப் பேச்சு மெல்லிய பூங்காற்று மட்டு மல்ல; மேருவையும் புழுதிமயமாக்கிவிடும். புயல்காற்றாகவும் வீசுவது உண்டு; கூனனை நிமிரச் செய்யவும், பார்வையற்ற வனுக்கும் பயணத்துணையாகவும், விசையொடிந்த தேகத்தில் எழுச்சியுண்டாக்குவதாகும், நகைச்சுவை உணர் வ உணர்வு கொப்பளிப்ப தாகவும், கசப்பு மருந்தினை வெல்லத்தில் வைத்துப் புகட்டுவதாக வும் மேடைக்கு ஏற்றபடி அமைவதும் உண்டு. அதிலும் குறிப்பாகக் கலைஞர் அவர்களின் அண்மைக் காலச் சொற்பொழிவுகள் கனிவுடனும், கற்கண்டுச் சுவையுடனும், தன்னிகரற்ற தலைமைக்கே உரிய தெளிவுடனும் இருப்பதனை நாமறிவோம் - இந்த நாடறியும். கலைஞர் அவர்கள் பேச வருகிறார் என்றால் - 'வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் வெள்ளம்போல் தமிழர் கூட்டம். அத்தகைய கவர்ச்சி - ஈர்ப்புச் சக்தி உடைய சொற்பொழிவு அவருடையது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டு மானால் - • தமிழுக்கு நிறம் உண்டு ஹைக்கூ கவிதைகள் • திருமதி ருக்மணி லட்சுமிபதி நூற்றாண்டு விழா • சுதந்திர தின பொன்விழா - தியாகிகள் வழியனுப்பு விழா • சுதந்திர தின கொடியேற்று விழா . • மாநகராட்சியில் சுதந்திர தின பொன்விழா • சங்ககால தமிழ் நாணயங்கள் நூல் வெளியீட்டு விழா • மதுரை தீண்டாமை ஒழிப்பு மாநாடு iv