உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வழி மேல் விழி வைத்து... இந்தியா சுதந்திரம் பெற்ற - அதற்காக நடைபெற்ற போராட் டத்திலே ஈடுபட்ட சிதம்பரனார் அவர்கள் சிறையிலே இழுத்த செக்கு எங்கே இருக்கிறது என்பதை நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தேடிப்பிடித்து - அது கோவை நகரச் சிறையிலே இருப்பதைக் கண்டுபிடித்து அதைக் கொண்டு வந்து இந்த வளாகத்திலே வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். பப்ப் 25-வது ஆண்டு விழாவிலேதான் தில்லையாடியிலே வள்ளி யம்மை நகர் உருவாக்கி, வள்ளியம்மையோடு தென்னாப்பிரிக்கா விலே உத்தமர் காந்தியடிகளோடு நின்று, போரிட்ட நாராயண சாமி, நாகப்பன் என்ற இரண்டு ஆதிதிராவிட வீரர்களுடைய பெயரால் இரண்டு தொகுப்பு வீடுகள் அமைந்த பகுதிகளை உருவாக்கி அவர்களை வெள்ளி விழாவின் போது சிறப்பித்திருக் கிறோம் இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். நான் அவை களையெல்லாம் இங்கே அடுக்கிக் காட்ட விரும்பவில்லை. ஒவ்வொன்றையும் பார்க்கின்ற நேரத்திலே அந்த எண்ணம், அந்த நினைவு எல்லோருக்கும் ஏற்படும் என்ற நம்பிக்கையினால் நான் அவைகளைப் பற்றியெல்லாம் அதிகம் சொல்ல விரும்பவில்லை. ப - இன்று இங்கே நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு இருக்கின்ற தியாகச் சீலர்கள் அனைவரையும் அவர்களுடைய பாதம் தொட்டு நான் வணங்குகிறேன். தலைவர் மூப்பனார் அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் அவர்களை நாம் வழியனுப்பி வைத்து வாழ்த்துகின்ற காரணத்தால் -நாம் பேறு பெற்றவர்களாக ஆகிறோம்; இது அவர்களுக்குச் செய்கின்ற சிறப்பு என்பதல்ல; நமக்கு நாமே செய்து கொள்கின்ற சிறப்பு - நமக்கு நாமே தேடிக் கொள்கின்ற பெருமை என்ற அந்த உணர்வோடுதான் எளிய முறையிலே இந்த நிகழ்ச்சி இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. டெல்லிக்குச் செல்கின்ற ஒவ்வொரு தியாகிக்கும் எங்களு டைய அன்பின் அடையாளமாக அவர்களுடைய தேவையை