உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி 51 சக்க விடுதலை வேட்கை கொண்ட வீரன் ஒருவனைப் பார்த்து வெள்ளைக்கார துரையொருவன், "தொண்டு செய்யும் அடிமை - உனக்குச் சுதந்திர நினைவோடா? பண்டு கண்டதுண்டோ - அதற்குப் பாத்திர மாவாயோ? சாதிச் சண்டை போச்சோ? - உங்கள் சமயச் சண்டை போச்சோ? மயூ குக் குக்கண இ மகம குர்குயப்ப நீதி சொல்ல வந்தாய் - கண்முன் நிற்கொணாது போடா!" என்று கூறியதாகப் பாரதியார் பாடினாரே; அந்தப் பாட்டு இந்தச் சுதந்திரப் பொன்விழா ஆண்டிலும் பாடப்பட வேண்டிய நிலை இருப்பதை எண்ணிடும்போது புண்ணில் வேல்பட்டது போன்ற துடிதுடிப்பும் துன்பமுமன்றோ நம்மைத் துளைத்தெடுக்கிறது! நினைத்துப் பார்க்க வேண்டாமா; நம் நெஞ்சில் நிழலாட வேண்டாமா; தமதுடலைக் குருதியில் நனைத்து உயிர் மூச்சை சுதந்திரக் கொடி பறந்திட காற்றாக வழங்கிய தியாகத் திருவிளக்கு க கள் எத்தனை பேர் இந்த நாட்டு விடுதலைக்கு அடித்தளமாக அமைந்துள்ளனர்! . தென்னாப்பிரிக்காவில் இனவெறி எதிர்ப்பும் போராட்டத் தில் தன்னுடன் சிறையேகி மாண்டுவிட்ட மகளிர்குல இளம் மணிச்சுடர் தில்லையாடி வள்ளியம்மாளின் தியாகம்தான்; இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கான உணர்வைத் தனக்கு எழுப்பியது என்றுரைத்த உத்தமர் காந்தியடிகளின் தலைமையில் பெற்ற சுதந்திரத்திற்குப் பொன்விழா - சுதந்திரம் வாங்கித் தந்தவருக்கே என்ன பரிசளித்தது இந்த நாடு! -