உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வழி மேல் விழி வைத்து... எதிர்பார்த்த நேரத்தில் எல்லாம் கிடைக்காமல் போன போது கூட, தான் ஏற்றுக் கொண்ட கொள்கையிலே உறுதியாக இருந்து லவலேசமும் தடம் பிறழாமல் தன்னுடைய பொது வாழ்க்கையை ஆரம்பித்த இடத்திலேயிருந்து இந்த முதுமைக் கோலத்திலே - முதுமைக்காலத்திலே கூட உறுதியாகப் பின்பற்றி வருகின்ற ஒரு தியாகச் சுடர் டி. செங்கல்வராயன் அவர்கள் ஆவார்கள். அவர்கள் இன்றைக்கு நடைபெறுகின்ற மாநில ஆட்சியையும், மாநகராட்சி யையும் புகழ்ந்து பேசியிருப்பது இந்தப் பொன் விழாவிலே எங்களுக்கு தியாகிகளால் சூட்டப்பட்ட பொற் பதக்கங்கள் என்று நான் கருதுகிறேன். அதற்கான என்னுடைய நன்றியை, வணக் கத்தை அவருக்குத் தெரிவித்துக் கொள்ள நான் கடமைப் பட்டிருக்கிறேன். தமிழகம் தான் பல இந்தியத் திருநாட்டின் நிகழ்வுகளுக் கெல்லாம் முன்னோடியாக இருந்திருக்கின்றது. இங்கே உள் ளாட்சித் துறை அமைச்சர் தம்பி கோ.சி.மணி எடுத்துக்காட்டி யதைப் போல, மேயர் தன் உரையிலே குறிப்பிட்டதைப் போல இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கான திட்டங்கள் கூட உத்தமர் காந்தியடிகள், மூதறிஞர் இராஜாஜி இவர்கள் எல்லாம் கலந்து ஆலோசித்த இடமாகவே தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரம் இருந்திருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கும் போதும், முதல் சுதந்திரப் போராட்டம் வேலூர் பகுதியிலேதான் தொடங்கியது என்பதை வரலாற்று ரீதியாக அறிகின்ற போதும் காந்தியடிகள் இந்தியாவிலே உள்ள வறுமை நிலையை அடையாளம் காணுகின்ற பகுதியாக மதுரை மாவட்டப் பகுதி இருந்தது; அதற்குப் பிறகுதான் அவர் முழ வேட்டியும், முழத் துண்டும் அணியத் தொடங்கினார் என்ற அந்தச் சரித்திரமும், தமிழகத்திலே இருந்து தொடங்கின. நான் பல நிகழ்ச்சிகளிலே குறிப்பிட்டதைப் போல. தென்னாப்பிரிக்கா இன வெறி எதிர்ப்புப் போராட்டத்திலே