உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வழி மேல் விழி வைத்து.... ம இன்னொரு ஊர் - சூரக்கோட்டை - அங்கே உள்ள ஊராட்சி யில் ஒருவர்; நான் கட்சிப் பெயரையெல்லாம் சொல்ல விரும்ப வில்லை. முதலிலே நான் கூறிய அந்த இருவரும் தி.மு.க. அனுதாபிகள் என்று தினமலரிலே போடப்பட்டுள்ளது. அது உண்மையோ பொய்யோ தெரியாது. எந்தவித அனுதாபியாக இருந்தாலும் சரி -எங்க அனுதாபம் கிடையாது (கை தட்டல்) சட்டத்தின் அனுதாபம் கிடையாது; ஊழலை ஒழிக்கிறது மாத்திர மல்ல; ஊழலைத் தடுக்க வேண்டும் ஊழல் புரிகிறவர்களைத் தண்டிக்க வேண்டும். அதுதான் தி.மு.கழக ஆட்சியின் குறிக்கோள். தவறு செய்தவர்களைத் தப்ப விடக் கூடாது. தப்ப விடு என்று சிபாரிசு செய்யவும் யாரும் வரக்கூடாது. அப்படி வந்தால், முதலில் சிபாரிசு செய்ய வருகிறவர்களைத்தான் பிடித்து உள்ளே போட வேண்டும். சூரக்கோட்டையில் - இன்னொரு கட்சியைச் சேர்ந்தவர் - நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. விரைவில் பெயர் வெளியே வரும். ஆனால் ஊராட்சி மன்றத்திலே நிற்கும்போது சுயேச்சை யாகத்தான் நிற்பார்கள். அவர் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் அல்ல; ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் ரூபாயை சுரண்டிக் கொண்டு, முன் ஜாமீன் பெறுவதற்காக சென்னைக்கு வந்து சுற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே, மக்களாட்சியின் மாண்பை வளர்க்க வேண்டும். அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்று எண்ணுகின்ற நேரத்தில், அதற்கு தடையாக, இடையூறாக, முட்டுக்கட்டையாக இன்றைக்கு இப்படியும் சிலபேர் இருக்கிறார் கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நான் இதிலே எவ்வளவு கண்டிப்பானவன் என்பதை சென்னை மாநகராட்சி மன்றத்திலே 1974-ஆம் ஆண்டு வாக்கிலே நான் எடுத்த நடவடிக்கையிலேயிருந்தே நீங்கள் எல்லாம் புரிந்து கொண்டிருக்கலாம். பெரியவர் செங்கல்வராயன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதே மாமன்றத்தில் நடைபெற்ற ஒரு ஊழல், சட்டமன்றத்திலே டாக்டர் ஹண்டே அவர்கள் அதை வெளிப் படுத்திய போது - அதைப்பற்றி நானும் கேள்விப்பட்டிருந்த