உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வழி மேல் விழி வைத்து.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர். மு. கருணாநிதி (மு. கருண 77 கல்வெட்டுக்களின் மூலமாகவும், அந்த நாடுகளிலே கிடைக்கின்ற ஆதாரங்களின் மூலமாகவும்தான் அறிந்து கொள்ள முடிந்தது. அந்தத் தலைப்பிலே இந்தச் செய்திகளையெல்லாம் அன்றைக்கு நான் எடுத்துச் சொன்னேன். குறிப்பாக நம்முடைய தமிழ்நாட்டு வரலாற்றை இன்றைக் கும் சுட்டிக் காட்டுகின்ற அளவிற்கு நம்முடைய நாணயங்கள் இருக்கின்றன. இந்த நாணயங்களை எல்லாம் கண்டுபிடிப்பதற்கு நம்முடைய கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார் என்பதை இந்த நூலைப் படிக்கும்போதும், அவர் இங்கே பேசிய அந்த உரையைக் கேட்கும்போதும் நம்மால் உணர முடிகின்றது. 9 அவர்கள் எப்படியெல்லாம் இந்த நாணயங்களைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதை அவரே இப்படி குறிப்பிடுகிறார் அதுவும் தற்காலத்திலே நாணயத்தைத் தேடுவது என்பது சாதாரணமான காரியமல்ல. நான் அவர் தேடிய நாணயத்தைத்தான் சொல்கிறேன். நீங்கள் எண்ணுகின்ற நாணயத்தை அல்ல (கை தட்டல் ) அவரே கூறிய வாசகத்தைப் படிக்கும்போது அவர் எவ்வளவு இன்னல்களை இதற்காக ஏற்றுக் கொண்டார், எத்தகைய முயற்சிகளிலே ஈடுபட்டார் என்பது நமக்குத் தெளிவாகின்றது. அவர் சொல்கிறார்; மதுரையில் ஒரு நாணயச் சேகரிப்பாளரிடமிருந்து சில நாணயங்கள் வாங்கினேன். அந்த நாணயத் தொகுப்பில் தமிழ்- பிராமி எழுத்துள்ள நாணயம் ஒன்று இருப்பதைக் கண்டேன். இந்த நாணயத்தைப் பார்த்தவுடன் பெருமகிழ்ச்சி அடைந்தேன் இருண்ட குகைக்குள் செல்ல ஏதோ ஒரு ஒளி விளக்குக் கிடைத்தது போல உணர்ந்தேன். பல்லாண்டுகளாக தொல் எழுத்து ஆய்வில் ஈடுபட்டிருந்ததால் இந்த நாணயத்தில் உள்ள எழுத்தை என்னால் படிக்க முடிந்தது. தமிழகத்தில் தமிழ் - பிராமி எழுத்தைப் படிக்கத் தெரிந்தவர்கள் வெகுசிலரே உள்ளனர். தமிழ்த்தாயின் அருளா லேயே இந்த நாணயம் என் கைக்குக் கிடைத்ததாக கருதுகிறேன்