பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வாசகர்களில் பெரும்பாலோர் கிளுகிளுப்புச் செய்தி களையும், கிசுகிசுத் தகவல்களையும், சிரிக்க வைக்கும் துணுக்குகளையும், சினிமா நடிகர் நடிகைகள் பற்றிய வம்பளப்புகளையும் ஆவலுடன் விழுங்குகிறார்கள் என்பதனால், பத்திரிகை நடத்துகிறவர்கள் இந்த ரகமான விஷயங்களை மிகுதியாக சேகரித்துத் தரும் தளங்களாகவும் மேடைகள்ாகவும் ஆக்கி விட்டார்கள்

தங்களுடைய பத்திரிகைகளை.

இவற்றுடன், சிலிர்க்க வைக்கும் மர்மச் செயல்கள், கொலைகள், பரவசப்படுத்தும் பெண் அழகு வர்ணனை களும் காமச்பெயல் விவரிப்புகளும் தி ைற ந் த, விறுவிறுப்பாக வளரும் கதைகளை சப் ைள பண்ணுவதிலும் பத்திரிகை அதிபர்கள் கருத்தாக இருக்கிறார்கள். வாசகர்கள் இவற்றை விரும்பும் ருசியிலிருந்து விடுபடத் தயாராக இல்லை என்பதை பத்திரிகைக்காரர்கள் நன்றாக அறிந்து வைத்திருக் கிறார்கள்.

"மாதம் ஒரு வெளியீடு அவர்களுக்கு வெகுவாகக் கைகொடுத்துள்ளது,

"மாதம் ஒரு மலர்' என்று கதைகள், கட்டுரைகள், கவிதைகளுடன் வெளிவரத் தொடங்கிய வெளியீடுகள், சில வருடங்களிலேயே, குறைந்து தேய்ந்து இல்லாது போயின. "குமரி மலர் மட்டுமே நீடித்து வளர்ந்தது.

பின்னர், "ராணி நிறுவனம் ராணி முத்து என்ற

இ வாசகர்களும் விமர்சகர்களும் 107