பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நல்ல இலக்கியத்தைக் காணும் பொழுது அதைத் தெரிந்து கொள்ளவும் பரிச்சியம் செய்து வைக்கவும் அவனிடம் திராணி வேண்டும். அப்படியே போலியைக் காணும் போது, யார் வந்து நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் அது போலி என்று சொல்லுவதற்கு நெஞ்சு அழுத்தம் கொண்டிருக்க வேண்டும்.”

விமர்சகனிடம் காணப்பட வேண்டிய குணமும் இது தான்.

மதிப்புரை என்பது மேம்போக்கா ச்ே சொல்லப் படுகிற அபிப்பிராயமேயாகும், விமர்சனம் ஆழ்ந்து கவனித்து, ஒரு படைப்பின் அல்லது புத்தகத்தின் தன்மைகளையும் தவறுகளையும் - குணங்களையும் - குறைகளையும் நயங்களையும் சத்தற்ற தன்மைகளையும்சுட்டிக்காட்டுவது. இது இப்போது 'திறனாய்வு' என்று கூறப்படுகிறது.

குறைகளை மட்டுமே கூறுவதும், கடுமையாகத் தாக்குவதும் தான் விமர்சனம் என்று பலர் கருதுகிறார்கள்.

அது சரியல்ல.

நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்று சிவனாரிடமே எதிர்த்து வாதாடிய நக்கீரன் தான் சரியான விமர்சகன் என்று போற்றி, அவ் வழியைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவோரும் உளர்.

ஆனாலும், தமிழில் விமர்சனக்கலை போதிய வளர்ச்சி பெற்றதில்லை. ஆரோக்கியமான முறையில் விமர்சனம் வளர்க்கப்படவுமில்லை.

வாசகர்களும் விமர்சகர்களும் 135