பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இவர்களில் திறமையாளர்கள் எழுதியவற்றை - அவர் படித்ததில்லை; படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்த தில்லை, படித்த புத்தகங்களில் கூட, அவருக்கு வேண்டியவர்கள், அவரை ஆதரிப்பவர்கள், அவரை அனுசரித்துப் போகிறவர்கள் எழுத்துக்களை மட்டுமே பாராட்டிப் பேசின்ார்: எழுதினார்.

ஆகவே, க. நா. சு. :வின் விமர்சனங்களில் நேர்மையும் நாணயமும் இல்லை என்பதை இலக்கிய வாசகர்கள் விரைவில் புரிந்து கொண்டார்கள். 1960 களின் மத்தியில், அவர் இனி நான் தமிழில் எழுதப் போவதில்லை; இங்கிலீஷில் மட்டுமே எழுதுவேன்' என்று அறிவித்து விட்டு புதுடில்லி போய் சேர்ந்தார்.

1950 களில் க.நா. சு. மெளனி கதைகளை உயர்வு படுத்திப் பேசலானார். மெளனி' இருபத்திரண்டு அல்லது இருபத்து நான்கு கதைகளே எழுதியிருப்பினும், அவை அத்தனையும் சிறந்த சிறு கதைகள் உயர்ந்த இலக்கிய சிருஷ்டி என்று புகழ்ந்து எழுதி வந்தார். தமிழில் மெளனி வழிபாட்டுக்கு வழி செய்தார் என்று

சொல்லலாம்.

மெளனி’ என்ற புனைபெயரில் எழுதிய எழுத்தாளர் 'நல்ல சிறுகதைகள் எழுதியுள்ளார் என்பது சரி தான். அதே போல அவர் எழுதிய கதைகளில் சாதாரணமானவையும் அநேகம் இருக்கின்றன. அவர் காதல் தோல்வியில் விரக்தி அடைந்த ஒருவனின் மன உளைச்சலை வைத்தே பல கதைகள். எழுதியுள்ளார். சிக்கல் நிறைந்த தனிரக நடையை அவர் எழுத்தில்

இ வாசகர்களும் விமர்சகர்களும் 1.56