பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றலும், எழுத்தாளன் ஆக வளர வேண்டும், எனும் உத்வேகமும் பெற்றிருந்த இளைஞர்கள் தங்கள் எழுத்துக் களை, சங்கு வாரப் பத்திரிகைக்கு அனுப்பினார்கள்.

'சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே! அதைத் தரணிக்கெல்லாம் எடுத்து ஒதுவோமே!’ என்று பாரதி வாக்கை முழக்கம் செய்து கொண்டு வளர்ந்த சுதத்திரச் சங்கு வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது. வேகம் நிறைந்த தமிழ் நடையில், சின்னச் சின்னக் கட்டுரை களாகவும் சிறு கதைகளாகவும். நாட்டு நடப்புகளும், விடுதலைப் போராட்ட விஷயங்களும், சுதந்திர உணர்வும், ‘சுதந்திரச் சங்கு” இதழ்களில் வெளிவந்தன். கவி சுப்பிரமணிய பாரதியின் பெருமையை மக்களுக்கு உணர்த்து

வதில் முன்னின்றது 'சங்கு'.

அந்நாட்களில் பாரதியின் பெருமை நாட்டு மக்களால் சரிவர உணரப்பட்டிருந்ததில்லை. பாரதியை நல்ல கவி என அங்கீகரிக்கவே மறுத்தார்கள் பண்டிதர்கள், வித்துவான்கள் புலவர்கள் வகையறா ஆங்கிலம்கற்றவ ர்கள் ஆங்கிலக் கவிதைகளைப் படித்து ரசித்து மகிழ்வதே கவுரவம் - பெருமை என்று கருதி வாழ்ந்தார்கள்.

சுதந்திரப் போராட்ட வேகம் பாரதி கவிதைகளை உயிர்ப்புடன் ஒலிக்க வைத்தது. விடுதலைப் போராட்ட வீரர்களும் தொண்டர்களும் ஊர்வலத்தின் போதும், சொற்பொழிவு நிகழும் இடங்களிலும், பாரதி பாடல்களை உணர்ச்சிகரமாகப் பாடினார்கள், பத்திரிகைகள் பாரதியின் தேசீயப் பாடல்களை எடுப்பாகப் பிரசுரித்தன.

வாசகர்களும் விமர்சகர்களும் 13