பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பத்திரிகை விற்பனை வரலாற்றில் இது ஒரு 'ரிக்கார்ட் என்றே சொல்லப்பட வேண்டும்.

எல்லாம் சிறிது காலத்துக்குத் தான்.

லட்சுமிகாந்தனின் நச்சு எழுத்துக்களால் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்த பட உலகப் பிரபலஸ்தர்கள் சிலர் சேர்ந்து திட்டமிட்டு, ஆள் வைத்து லட்சுமிகாந்தனைக் கோலை பண்ணி விட்டார்கள்.

'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” பிரசித்தி பெற்றது. அதனால் செய்திப் பததிரிகைகளுக்கு பரபரப்பான விற்பனை ஏற்பட்டது.

காமலீலைகள், அந்தரங்கங்களின் அம்பலங்கள், மர்ம விஸ்தரிப்புகள், கொலை - கொள்ளை - திகில் விஷயங்கள் எல்லாக் காலங்களிலும், எல்லன்

இடங்களிலும், வாசகர்களை அதிகமாக ஈர்க்கும் சக்தி பெற்றிருக்கின்றன.

லட்சுமிகாந்தன் வேலைகளும், அவரது கொல்ைச் செய்தியும், அது சம்பந்தமான வழக்கும் இந்த உண்மையைத் தான் அழுத்தமாக மேலும் வலியுறுத்தின.

இ வாசகர்களும் விமர்சகர்களும் 64