பக்கம்:வாடா மல்லி.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 343


மேகலை தேரிலிருக்கும் கூத்தாண்டவரைப் பார்த்தாள். டேவிட்டாகத் தோன்றிய ஒரு உருவத்தை வலுக்கட்டாயமாக விலக்கினாள். தேருக்கு முன்னால் நடக்கும் திருப்போரைப் பார்த்தாள். காளி வேஷம் போட்டவரும், அரவான் வேஷம் போட்டவரும், கத்தியும், வாளுமாக, வேலும் வில்லுமாக போரிடுகிறார்கள். துள்ளித் துள்ளித், தள்ளித் தள்ளி, தாம் துரம் என்று குதிக்கிறார்கள். அரவான், காளியின் வாளுக்கு பலியாகாமல், லாகவமாக தலையை வளைக்கிறான். காளியைக்கூட அவன் கொல்ல போவது போன்ற நிலை. உடனே, எல்லா அலிப் பெண்டாட்டிகளும், கொண்டையிலுள்ள பூக்களை எடுத்து, அரவான்மேல் பூப்பூவாய் வீசுகிறார்கள். சபாஷ் போடுகிறார்கள், விசிலடிக்கிறார்கள். விநயமாக ஆடுகிறார்கள். அந்தக் காலத்து, ஆகாய அம்புகள் போல், வாணவேடிக்கைகள். இந்தக் காலத்து ஆணு ஆயுதங்கள் போல் சிவகாசி வெடிகள். அலிகளின் நாட்டியங்கள். உருமி மேளம். உள்ளூர் அலிகளின் டேப்புகள். வெளியூர் நீலிமாவின் டோலக். ஒரே சங்கீதக் கூச்சல், அரவானுக்கு வக்காலத்து. காளிக்கும் - காளியாடிக்கும் திட்டுக்கள்.

அரவான் சாமியாடி வலுவானவர். ஆனாலும் புராணத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு தலையை நீட்டுகிறார். ஒரு ‘பாவலா அரிவாள் வெட்டு. அப்படியே தரையில் சாய்கிறார். சாராய வாய் கோணுகிறது. அந்தச் சமயத்தில் தேரிலிருந்த அரவான் தலை வெட்டப்படுகிறது. அத்தனை அலிகளும் -

அழுது புலம்புகிறார்கள். புருஷனின் தலை துண்டாகி விட்டதைக் கண்டு, உடம்பே துண்டாப் போவதுபோல், மாரடிக்கிறார்கள். கைகளை ஒன்றோடு ஒன்று உரசி வளையல்களை உடைத்துக் கொள்கிறார்கள். கொண்டை விரித்து, மலர்ச்சரங்களைப் பிய்த்துப் பிய்த்துக் கசக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/365&oldid=1251096" இலிருந்து மீள்விக்கப்பட்டது