பக்கம்:வாடா மல்லி.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 சு. சமுத்திரம்


எதிர்ப்புறம் பாயில் ஒரு உருவம். ஊற வைத்த சேலைபோல், ஒடுங்கிக் கிடந்தது.

ஆறுமுகப்பாண்டி, மின்விளக்கைப் போட்டான். கட்டிலின் அருகே போய் எப்பா எழுந்திரிங்க... யாரு வந்திருக்கான்னு பாரும் என்றான். அதே சத்தத்தில், “எம்மா உன்னையுந்தான் என்றான். ஆனாலும் அந்த உருவங்கள் அசையவில்லை. பக்கத்துக்கு ஒன்றாக உள்ள இரண்டு அறைக் கதவுகள்தான் திறந்தன. ஒன்றில் மோகனா வெளிப்பட்டாள். இன்னொன்றில் கோமளம். தோள்வரை வளர்ந்த ஒரு பாவாடை தாவணி ஜாக்கெட் பெண்ணைக் காட்டி நின்றாள். அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.

சுயம்பு அவர்களைப் பார்க்காமல் நார்க்கட்டிலின் பக்கம் குனிந்தான். அப்பாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டான். இதற்குள் தட்டுத்தடுமாறி வந்த அம்மாவின் கழுத்தைத் தோளோடு சேர்த்துப் போட்டுக்கொண்டே ‘எப்பா. எப்பா. நீங்க பெத்த பிள்ள வந்திருக்கேம்பா, ஒங்க பிள்ளைப்பா. என்று அழுதான்.

ஆயிரம் ஆயிரம் ஒலி பெருக்கிச் சத்தங்களாலும், மாடுகளின் கத்தலாலும் கோழிகளின் கூவலாலும் தெருச் சண்டைகளின் ஒலங்களாலும் எழுப்ப முடியாத அந்த உருவம், இந்தச் சின்னச் சத்தத்தைக் கேட்டுக் கண்ணைத் திறந்தது. அந்தக் கம்பீரமான முகம், இப்போது பட்டுக் கிடந்தது. வாய் கண்போல் சிறுத்தும், கண்கள் வாய் போல் பெருத்தும் குழிகளாக - பள்ளங்களாகிக் கிடந்தன. ஆனாலும், அந்த உருவத்திற்குள் ஒரு வேகம். உத்திரச் சட்டம் மாதிரியான கைகள் இப்போது ஒரு விரல் தடியில் கிடந்தன. ஆனாலும் அது சுயம்புவின் தோளைப் பற்றுகிறது. அவன் தலையில் போட்டுக்கொள்கிறது. அவன், அதற்குள், அந்த உருவத்தைத் தூக்கி நிறுத்தி மார்போடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/374&oldid=1251103" இலிருந்து மீள்விக்கப்பட்டது