பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி மண்கலம் தாங்கி ஒவ்வோர் வாயிலில் பிச்சை கேட்பாள் ; உண்ணுவாள் அங்கோர் வீட்டில் உதவிய எச்சில் சோற்றை ; மண்மீது இடிந்த வீட்டில் துயிலுவாள் ; மழைகு எளிர்க்கோ மண்சீய்த்துச் சுருண்டு துரங்கும் ஞமலிபோல் வாழு வாளே ! வட்டுடல் மறைக்க மீன் இல் வலேஞனின் பறியைப் போல ஒட்டிய வயிற்றைக் காட்டி ஒருகாசு கேட்பாள் : வண்டி முட்டுகள் கடைகள் கோயில் முன்நிற்பாள் ; அம்மா ...! ஐயா...! எட்டுநாள் ஆச்சே சோற்றை என்கண்ணுல் கண்டென் பாளே ! மோசம்செய் தேழை சோற்றை முழுமையும் திருடும் செல்வர் ஏசுவார் ; சீச்சி 1’ என்பர் ; இல்லேபோ என்பார் ; மற்றும் அவள் கண்கள் காட்டு கின்ற மாசிலாக் குளிர்மைக் கிந்த வையகம் ஈடோ அம்மா ! 7