பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது வேண்டும் ? மேற்றிசையில் செம்பரிதி மூழ்கும் நேரம்! மெய்மறக்கத் தென்றலுராய்ந் தோடும் நேரம் ! ஆற்ருேரம் தமிழ்ச்சுவையை உன்னி உன்னி வண்டினம்போல் அதில்சொக்கிக் கிடந்தேன்; கண்முன் மாற்றில்லாச் செம்பொன்னே உருக்கி வார்த்த மழைக்கண்ணுள் இளநகையாள் வானில் வந்தாள்; காற்ருடு கின்றனேயோ ? கவிஞா! உன்னேக் கண்டுபல நாளிருக்கும், நலமா?’ என்ருள். I. தோற்றமுண்டா? பேசிடுமா? என்பார்க் கொன்று சொல்லிடுவேன். ஒடைகடல் நிலவு காற்று நாற்றமலர் புல்பூண்டு கல்லும் வானும் நல்ல நல்ல கதைசொல்லும்! கேட்பார் கேட்பர்! ஆற்றுக்கால், உயர்நன்செய், குறையாச் செல்வம், அழகிளமை, பெருமதிப்பு, வான வாழ்வு, நாற்றிசையும் உன் ஆணே கேட்டு மக்கள் நடுங்குகின்ற தோள்வலிமை, இன்சொல் மாதர், 2. தாமரைப்பூ, நிறைவாவி, அருகில் சோலே, தனிவீடு, குளிர்காற்று, தன்னில் ஓடி தேமாவின் பழச்சாறு, பலாச்சுளேத் தேன், தெவிட்டாத தமிழ்ப்பாட்டு, நெஞ்சில் என்றும் ஏமஞ் சேர் நாட்டியப்பெண், மானின் கூட்டம், எதுவேண்டும்? கேள்கொடியில் தருவேன்' என்ருள் "பூமியில்கான் சலிக்காது கவிதை பாடிப் புரட்சிசெய்ய வேண்டு மென்றேன்; வாழ்த்தி ேைள! 3: