பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பெண்தலை கோதி எடுத்திடு பேன்போல் பிய்த்தனன் என்னுடல் களைகள் ; தண்விழி மாதர் சுவைபெறக் காளே தட்டிடா தெதனையுஞ் செய்வான் மண்ணினில் பூநுகர் வண்டாம் உழவன் ! வஞ்சகம் அறிந்திலன் ! அந்தோ ! பெண்ணின் அறிவு பின்னென உரைத்தார் பேச்சினிற் கிலக்குநான் ஆனேன். ” 4 என்னலும் நானே எழுந்தனன் விரைந்தே ; என்தொழில் நோக்கியே நடந்தேன் ; உன்னிடுங் தோறும் உழவனேப் போல ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தன்னலங் கருதி ஒவ்வொரு பொருள்மேல் தாவியே வண்டெனப் பறந்து மன்னிய கிலேயாத் தன்மையைக் கண்டேன் ; வாழ்வினில் வீழ்த்துவோம் அதையே ! 5