உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் தமிழ்நாடு வாழ்கவே வாழ்க! வாழ்கவே! மங்காப் பெரும்புகழ் எங்கள் தமிழ்நாடே! வாழ்க வாழ்கவே-என்றென்றும் வாழ்க வாழ்கவே! ஆழ்கடல் முப்பால் வேங்கடம் வடக்கே அரண் செய் எங்கள் அன்னையர் நாடே! (வாழ்க) மலைபடு வளனும் வயல்படு வளனும் வற்ருப் பெரும்புகழ் உற்றதமிழ் நாடே! அலைபடு பெருங்கடல் அக்கரை நாடும் அருங்கலை வாரி வழங்கிய வள்ளல் நீ! உதய சூரியனும் பொதிகைத் தென்றலும் உன் புகழ் பாடல் என்னென் றுரைப்பேன்! இதயம் களிகொள அன்னையர் வாழ்த்த ஏற்றினர் அரசு கட்டிலேற் றினரே! முன்னுள் ஆண்டோர் உன்னை எதற்கோ சென் ைஎன்றழைத்தார்! செய்ந்நன்றி கொன்ருt! இந்நாள் அரசுளம் அண்ணு அரசு - பொன் முடி சூட்டினர்! அண்ணு போற்றியே! இந்நாள் தமிழ்நாடே" பொன்ள்ை! பொன்னுள்! எமதரும் அண்ணு தமிழக முதல்வன் செந்நாப் புலவன் வள்ளுவன் வழியில் செந்தமிழ் அரசைச் செலுத்துவன் வாழியே! 16–1–69 - 9}