பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறை மதி இயல் : பொன்னொளி மலைஇ டுக்கில் புகுந்தது; கடுங்கித் தாவிக் கன்னல்போல் பருத்த நாணற் காட்டினுள் இடைபு குந்து முன்னுள்ள பலாமரத்தில் மோதிற்று: சாரல் எங்கும் பொன்மயம்! அக்தி வானம் புறப்பாட்டுக்கு) எடுத்துக் காட்டே! காடெலாம் பூவின் தேக்கம்! கழையெலாம் சிட்டின் கூச்சல்! ஓடையின் அருகில் தாழ்ந்தே உயர்ந்திட்ட மரத்தின் மீது பேடையைப் பிரிந்த ஆணின் பெருவிளி உருக்கும் நெஞ்சை: கூடெலாம் அடடா காதல் கொட்டங்கள் குடைந்து பாயும்! மலையிடைப் பிறந்து பூத்த மலரிடைக் கலந்து பச்சை இலைசெடி கிளைகள் தாவி இன்பத்தின் பெருக்கால் தென்றல் அலைந்தது; வாரி வாரி அளித்தது பூகாற் றத்தைக்: கலைக்தோடி வானில் மேகம் புதுப்புது அழகைக் காட்டும்.