பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கப் பாடல் புதுநோக்குப் புத்தெண்ணம் என்றே கூச்சல் போடுகின்ற யாப்பறியாக் கூட்டம் கண்டேன்! எதுநோக்கு வாழ்விற்குத் தேவை என்ன? என்கின்ற நல்லெண்ணம் இல்லை இங்கே பொதுநோக்கு வேண்டுமெனக் கூறு கின்றார்! புறப்பாடல் அகப்பாடல் கல்லார் ஆன்ற மதுநோக்குத் தீந்தமிழாம் தங்கப் பாவால் மறுமலர்ச்சிக் கவிகண்டேன், மகிழ்ச்சி கண்டேன்! ார்ன் கிழவன்; எனதன்பர் தங்கப் பாவோ நல்லதமிழ்ப் பேரறிஞர்; கொள்கை வீரர்! வான்கிழவன் வெய்யோன்போல் தமிழ கத்தின் வளமைக்குப் பாடட்டும்; அவரின் பாடல் ஊன்கிழவன் உணர்வுக்கு வலிவேற் றட்டும்! ஊரேய்க்கும் கோழைகட்கு வழிகாட் டட்டும்! கூன்கிழவன், இந்நாட்டுப் பாட்டி மார்கள் கொல்புலியாய் மாறட்டும் அவர்பாட் டாலே! பாடுகின்றேன்’ என்கின்ற பாடல் கண்டேன்; . பைந்தமிழின் சுவைகண்டேன்! இந்த நாட்டில் தேடுகின்றேன் நல்வாழ்வை என்று சொல்லும் திருடனைத்தான் காண்கின்றேன்; அந்தோ! காட்டில் வாடுகின்றேன். என்கின்ற மக்கள் வாழ்வின் வழிவகுக்கும் கற்பாடல் தங்கப் பாடல்! சூடுகின்றேன் வாழ்த்துமுடி! பன்னூல் மேலும் தோன்றட்டும்! தங்கப்பா! வாழ்க கீடே! 2-3-' 74